பிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016பிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
உங்கள் உள்ளங்கை கொள்ளும் அளவு தினமும் பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் நொறுக்குத் தீனி சாப்பிடும் ஆவல் குறைய ஆரம்பிக்கும்.
பிஸ்தா பருப்பு
இது ஆரோக்கிய வாழ்வின் முதல் படி. காரணம் எதையாவது கொறிக்க ஆசைப்படும் மனம் அந்த நேரத்தில் எது கிடைத்தாலும் சாப்பிடத் துடிக்கும். 

ஜன்க் ஃபுட்ஸ் அருகில் இருந்தால் நிச்சயம் கை தானாகவே அதை நோக்கிச் சென்று விடும். இதைத் தவிர்க்க, பிஸ்தா, பாதம், முந்திரி போன்ற பருப்புகளை சாப்பிட்டால் அவை ஊட்டச் சத்து தருவதுடன் மாலை நேர பசிக்கு ஏற்ற ருசியான உண்வாகவும் இருக்கும்.

பிஸ்தாவில் கொழுப்பு அதிகம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. அதில் புரதமும் நார்ச் சத்தும் தான் மிகுந்துள்ளது. உடலினை உறுதி செய்யும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பிஸ்தா பருப்பில் நிறைந்துள்ளது. பிஸ்தாவை நம் இஷ்டப்படி எப்படி வேண்டு மானலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதை மிதமாக வறுத்து, உப்பும் காரமும் போட்டுச் சாப்பிடலாம். அல்லது வீட்டில் பாயாசம் அல்லது கேசரி தயாரிக்கும் போது பிஸ்தாவை சுவை யூட்டியாக பயன் படுத்தலாம். 
அப்படியே கூட சாப்பிடலாம். உணவுச் சத்து நிபுணர்கள் கூறும் பிஸ்தாவின் பல்வேறு பலன்களைப் பார்க்கலாம்.

ஹீமோ குளோபின் உற்பத்தி

பிஸ்தாவில் வைட்டமின் B6 இருப்பதால் இது ஹீமோ குளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து ஹீமோ குளோபின்  எண்ணிக்கையை அதிகரிக்கும்.
ஹீமோ குளோபின்ஹார்மோன் சுரப்பு

உடலுக்கு புத்துணர்ச் சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கு வதில் ஹார்மோன்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றன.

செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப் படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக ஹார்மோன் களின் செயல்பாடு மிகவும் முக்கியம். 

பிஸ்தா பருப்பில் உள்ள சத்துகள், நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப் படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்கு கின்றன.

இளமைத் தோற்றம்

பிஸ்தாவில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அது ஹார்மோன்கள் செயல்பாட்டை சீர் செய்யும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும். பிஸ்தாவில் உள்ள சத்துக்கள் புற ஊதாக் கதிர்களி லிருந்து பாதுகாக்கும். 
இளமைத் தோற்றம்
சரும கேன்சர் வருவதையும் தடுக்கும். பிஸ்தா எண்ணெயில் வைட்டன் ஈ அதிகம் இருப்பதால், அதைப் பயன்படுத்தும் போது சருமத்தின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். உலர்ந்த சருமத்திலிருந்து காத்து சருமம் எப்போதும் பளபளப்பாக புது பொலிவுடன் இருக்கச் செய்யும். 
இதனால் வயதான தோற்றம் தள்ளிப் போடப்பட்டு இளமைப் பொலிவுடன் நீண்ட நாள் வாழலாம்

கண்களுக்கு நல்லதுபிஸ்தா சிறந்த சத்துணவாக இருந்து கண் நோய்களி லிருந்தும் பாதுகாக்கும். அதிலுள்ள கரோடனாய்ட்ஸ், சியாந்தின் மற்றும் லுடெய்ன் கண்கள் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வருவதைத் தடுக்கும்.

ஆற்றல்களை அள்ளித் தரும்
பிஸ்தா பருப்பு நன்மைகள்
பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வர, அது உடலை எப்போதும் துடிப்பாகவும் சுறு சுறுப்பாகவும் வைக்க உதவும். உடலின் மெட்ட பாலிசத்தைத் தக்க வைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் ஈ மிகுந்தி ருப்பதால் உடல் அழற்சியை நீக்கும். 

உடல் பருமன்

அதனால் உடல் பருமனா வதையும் தடுக்கும். உள்ளங்கை அளவு பிஸ்தா தினமும் சாப்பிட்டு வர அது ஜீரண சக்தியை மேம்படுத்தும் பாக்டீரியாக் களைத் தக்க வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.. 

காரணம் இதில் வைட்டமின் பி6, காப்பர், மங்கனீஸ், பாஸ்பரஸ், தையாமின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பும் உண்டாகும்.

ஆரோக்கியம் மேம்பட்டால் உடலில் இயற்கை யாகவே பொலிவு ஏற்படும். உள்ளுறுப்புக் களின் செயல் பாடுகளும் நன்றாக இயங்கும்.

இனப்பெருக்க ஹார்மோன்

ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற் தகுதியையும், மனப்புத் துணர்ச்சியையும் தரும் அற்புத உணவு இந்த பிஸ்தா பருப்பு.
இனப்பெருக்க ஹார்மோன்பிஸ்தா பருப்பை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்தால் உடல் மிகவும் வலுவடையும். ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் இயற்கை யாகவே வலுவடையும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது.

நியாபகச் சக்தி
ஞாபகச் சக்தி
குழந்தை பெற்ற பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊற வைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.
ஆண்மை சக்தி

பிஸ்தா பருப்பில் இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் எனும் அமிலம் ஆகியன காணப்படு கின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஆண்மை சக்தியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.
பிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits ! பிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 1/17/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚