இன்று முதல் ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் கார்டு செயல்படாது ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

இன்று முதல் ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் கார்டு செயல்படாது !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
'இவிஎம் சிப்' இல்லாமல் இருக்கும் 'டெபிட் கார்டு', 'கிரெடிட் கார்டு'கள் இன்று முதல் வேலை செய்யாது. இந்த கார்டுகளை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ஸ்வைப்பிங் செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.
இந்த ஆண்டு முதல் 'இவிஎம் சிப்' பொருத்தப் பட்ட 'டெபிட்', 'கிரெடிட் கார்டு'களைப் பயன் படுத்துவது கட்டாய மாகும். 'இவிஎம் சிப்' என்பது யுரோ, மாஸ்டர்கார்டு அன்ட் விசா சிப் என்பதன் சுருக்க மாகும்.

பழைய முறையிலான 'மேக்னடிக் டெபிட்', 'கிரெடிட் கார்டு' களை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதியோடு முடிந்து விட்டது. 

ஆதலால், 'சிப்' இல்லாத 'டெபிட்', 'கிரெடிட் கார்டு' வைத்திருப்ப வர்களுக்கு அந்த கார்டு இயக்கத்தை அந்தந்த வங்கிகள் ஜனவரி 1-ம்(இன்று)தேதி முதல் நிறுத்தக் கூடும்.


ரிசர்வ் வங்கியின் உத்தரவுப் படி, நாட்டில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி இருக்கும் பழைய முறையிலான 'மேக்னடிக் ஸ்டிரிப்' வகை 'டெபிட், கிரெடிட் கார்டு'களை மாற்ற வேண்டும். 
இந்த கார்டுகளை எளிதாக பிரதிஎடுத்து மோசடி செயல் களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், அதற்குப் பதிலாக சிப் வைக்கப் பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வங்கி களுக்கு உத்தர விட்டது. 

இதற்கான காலக்கெடு வாக 2018, டிசம்பர் 31-ம் தேதியாக வும் நிர்ணயித்தது. 

பழைய முறையிலான 'மேக்னடிக் டெபிட், கிரெடிட் கார்டு'கள் வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள் வங்கியில் கொடுத்து புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளும் படி வங்கிகள் ஏற்கனவே பல்வேறு முறை தகவல் களை வாடிக்கை யாளர்களு க்கு அனுப்பி விட்டன.

அவ்வாறு அந்த எச்சரிக் கையைக் கண்டு கொள்ளாமல் இருப்பவ ர்களுக்கு இன்று முதல் 'டெபிட், கிரெடிட் கார்டு'கள் செயல் படாமல் போகலாம். 

வங்கிகள் அந்த கார்டுகளின் செயல் பாட்டை முடக்கி வைக்கும். அதேசமயம், ஆன்-லைன் கணக்கு செயல் பாட்டில் இருக்கும்.

பழைய முறையி லான 'மேக்னட்டிங் டெபிட், கிரெடிட் கார்டு'களை வைத்திருப் பவர்கள் ஏடிம் மையத்தில் பணம் எடுக்க முடியாது, ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாது.

இந்த உத்தரவு அனைத்துச் சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டு களுக்கும் பொருந்தும். 
கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக ரிசர்வ் வங்கி உத்தர விட்டு, 2016 ஜனவரி மாதத்தில் இருந்து நடை முறைக்க வந்து இந்த ஆண்டு கட்டாய மாக்கப்பட் டுள்ளது.

அதேசமயம், ஏடிஎம் டெபிட் கார்டுகளி லும், கிரெடிட் கார்டுகளிலும் சிப் வைக்கப்பட்டு இருந்தால், அதை மாற்றத் தேவை யில்லை. 


அவ்வாறு இல்லாமல் இருக்கும் கார்டுகளை வைத்திருப் பவர்கள், கணக்கு வைத்திரு க்கும் வங்கியை அணுகி கார்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப் படாது.
இந்த புதிய 'இவிஎம் சிப்' வைத்த 'டெபிட், கிரெடிட் கார்டு'கள் பழைய கார்டுகளைக் காட்டிலும் அதிகமான பாதுகாப் பானவே. கார்டுகளை 'ஸ்வைப்' செய்யும் போது கூடுதலாகப் பின் நம்பர் கேட்கும் என்பாதல், 

இதில் ஏமாற்று வேலைகள் செய்ய இயலாது. சாதாரண கார்டுகளில் ஸ்பைப்பிங் செய்து விட்டு உங்கள் கணக்கில் இருந்து பணத்தில் எடுத்துவிட முடியும். 

ஆனால், இந்த இவிஎம் சிப்வைத்த கார்டில் இருந்து பணத்தை எடுக்க இயலாது வகையில் பாதுகாப்பு அதிகப் படுத்தப் பட்டுள்ளது.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close