ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கட்சியில் சேர வாய்ப்பு?

0
காஷ்மீரில் நடக்கும் அத்து மீறல்கள் தொடர்பாக மத்திய அரசிடமிருந்த நேர்மையான அணுகு முறை கிடைக்க வில்லை என்று கூறி ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீரில் கடந்த 2010ல் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தவர் ஷா ஃபாயெசல். 
இவர் தனது 9 ஆண்டுகால பணிக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது பேஸ்புக்கில் இன்று கருத்து பகிர்ந்துள்ளார். ராஜினாமா செய்துள்ள ஷா ஃபாயெசல் பேஸ்புக்கில் தெரிவித்த தாவது:

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோருபவர்கள் மீது நயவஞ்சக மான தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன. மேலான தேசபக்தி என்ற பெயரில் இந்தியா வெங்கும் சகிப்புத் தன்மையும் வெறுப்பரசி யலும் மேலோங்கி வருகிறது.


இது நாள் வரை இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வந்த எனது ஐஏஎஸ் பதவியி லிருந்து விலகுகிறேன். காஷ்மீரில் தொடரும் கொலைகள் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன. ஆனால் அது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித நேர்மையான அணுகு முறையும் கிடைக்க வில்லை,

இந்துத்துவா சக்திகள் தங்கள் கரங்களால் இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லிம்களை ஓரங்கட்டவும், அவர்களது இருப்பை காலி செய்யவு மான காரியங்களை செய்து வருகிறது.
இந்நாட்டில், மக்களின் குரல் வளையை நீண்ட நாளுக்கு நசுக்க முடியாது. உண்மையான ஜனநாயத்தை நிலை நாட்டுவதற் காக இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும். இவ்வாறு ஃபாயெசல் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித் துள்ளார்.

தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள ஷா ஃபாயெசல் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை யாக தேசிய மாநாட்டுக் கட்சியில் சேரக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)