வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இதுவே போதும் !

0
இந்த தலைமுறை ஆண்கள், பெண்கள் அனைவருமே விரும்புவது கச்சிதமான உடலமைப்பை தான். உடல் ஒல்லியாக வும், தட்டையாக வும் இருக்க வேண்டுமென விரும்பும் அனைவரும் நாடும் ஒரே இடம் ஜிம் தான். 
ஏனெனில் நமது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவுவது சீரான உடற் பயிற்சிகள் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு உடற்பயிற்சியும் ஒருவகை பலனை தரக்கூடியது.

ஆனால் இந்த உடலமைப்பை பெற ஜிம்மிற்கு தான் செல்ல வேண்டு மென்று அவசியமில்லை. சில சாதாரண உபகரணங் களை கொண்டு எளிதில் நீங்கள் விரும்பும் உடலமைப்பை பெற இயலும். 


அந்த வகையில் உங்களுக்கு நீங்கள் விரும்பும் உடலமைப்பை வழங்குவதில் முக்கியமானது டம்பெல் மூலம் செய்யும் உடற் பயிற்சிகள். இந்தப்பதிவில் டம்பெல் பயிற்சிகள் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தசை வளர்ச்சி
டம்பெல்ஸை நீங்கள் தூக்கும் போது அது உங்கள் கை தசைகளை பயன்படுத்தி தூக்குகிறீர்கள். டம்பெல்லின் எடை உங்கள் கை தசைகளில் பிரதிபலிக்கும். நீங்கள் டம்பெல் தூக்கும் போது அது உங்கள் கை தசைகளை அதிக வலுவாக்க உதவும்.
டம்பெல் தூக்குவது இரண்டு வகையான நன்மைகளை வழங்கும் ஒன்று தசைகளை வலுவாக்குவது மற்றொன்று வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பது.

இதய ஆரோக்கியம்

டம்பெல் தூக்குவது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். தொடர்ச்சி யாக டம்பெல் தூக்குவது உங்கள் இதய துடிப்பை சீராக்கும்.
உடற்பயிற்சி செய்ய புதிதாக தொடங்குப வர்கள் கூட தினமும் 30 நிமிடம் டம்பெல் தூக்குவதன் மூலம் இதய ஆரோக்கி யத்தை அதிகரிக்கலாம். உங்கள் இதய துடிப்பு சீராக இருப்பதே உங்கள் இதய ஆரோக்கி யத்திற்கு அடிப்படை யாகும்.

எடை குறைப்பு


டம்பெல் மூலம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் கலோரிகளை எரிப்பதற் கான சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். இந்த கலோரிகள் எரிப்பு உங்கள் இதய ஆரோக்கிய த்தை அதிகரிப்பதுடன் உயர் இரத்த அழுத்தத்தை யும் குறைக்கிறது.
மேலும் இது எடை குறைப்பிற்கான மிகச்சிறந்த மற்றும் எளிதான வழியாகும். ஏனெனில் நீங்கள் டம்பெல் என்பது உங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருளாகும்.
தசைகளின் செயல்படும் அளவை அதிகரிக்கும்

டம்பெல் உடற் பயிற்சியினால் நிறைய ஆரோக்கிய பலன்கள் உள்ளது. இது தசைகளை வெளிப்புற மிருந்தும், உட்புற மிருந்தும் வலிமை யாக்கும். இது மூட்டுகளில் உராய்வு ஏற்படுவதை தடுக்கிறது.
உடற் பயிற்சியை தொடங்கும் போது எடை குறைவான டம்பெல்லில் இருந்து தொடங்கவும் இது அனைத்து தசைகளையும் வலுவாக்கும். குறிப்பிட்ட தசையை மட்டும் வலுவாக்க விரும்பினால் எடை அதிகமான டம்பெல்லை பயன் படுத்தவும்.

தசைகளின் சகிப்புத் தன்மை

இது விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த பயனளிப்ப தாகும். அவர்கள் தசைகளின் சகிப்புத் தன்மையை அதிகரிக்க டம்பெல்லை பயன்படுத்த லாம்.

குறிப்பாக டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டு விளையாடு பவர்கள் இந்த டம்பெல் பயிற்சியை செய்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. இது அவர்கள் நீண்ட நேரம் சோர்வடை யாமல் விளையாட இது உதவியாய் இருக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எடை தூக்கும் பயிற்சிகள் பொதுவாக எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. டம்பெல்ஸ் அனைவரும் செய்யக் கூடிய எளிய மற்றும் பயனுள்ள உடற் பயிற்சி ஆகும்.
உங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப நீங்கள் தூக்கும் டம்பெல்லின் எடையை மாற்றி யமைத்து கொள்ளலாம். டம்பெல்லை உபயோகி க்கும் முன் சிலவற்றை செய்ய வேண்டியது அவசியம்.

தயாராகுதல்
உடற்பயிற்சி தொடங்கும் முன் தயாராக வேண்டியது அவசியம். இது உடற் பயிற்சியின் போது காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். எனவே எளிமையான உடற்பயிற்சி களான ஜாக்கிங், நடைப்பயிற்சி, வளைவது போன்ற வற்றை செய்யவும்.
இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக் கவும், டம்பெல் தூக்குவதை எளிதாகவும் மாற்றக் கூடும்.

எடை குறைவான டம்பெல்


டம்பெல் உடற்பயிற்சியை தொடங்கும் முன் குறைவான எடை கொண்ட டம்பெல் கொண்டு தொடங்குவது நல்லது. குறைந்தது 10 முறை தொடர்ந்து டம்பெல்லை தூக்குவது நல்ல பலனை அளிக்கும்.
வசியம் உண்டாக்கக் கூடிய மூலிகை  !
போதிய அனுபவம் இல்லாமல் தொடக்க த்திலியே அதிக எடை கொண்ட டம்பெலை தூக்குவது தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சரியான நிலை

டம்பெல் உடற்பயிற்சி தொடங்கி யவுடன் தொடர்ந்து அதே நிலையை பின்பற்றுங்கள். இந்த உடற்பயிற்சி
பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதன்பிறகு பயிற்சியை தொடங்கவும். முதுகெலும்பை வளைக்கலால் நேராக நின்று தோள்களை சீராக அசைக்கவும். உடற்பயிற்சியின் போது காயம் ஏற்படமால் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)