கும்பகோணம் சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல் - விதிகளை மீறிக் கட்டப்பட்டது !

0
கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் துணிக் கடைக்கு உள்ளூர் திட்ட குழுமத்தினர் சீல் வைத்தனர். கும்பகோணத்தில் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு சென்னை சில்க்ஸ் துணிக்கடை புதிதாக கட்டி திறக்கப் பட்டது. 


ஐந்து அடுக்கு களைக் கொண்ட இந்த கட்டடத்தில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து இந்தக் கட்டடத்தில் வரைபடத்தில் உள்ளவாறு கட்டிடங்கள் இருக்கிறதா என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் !
அப்போது வரைபடத்தில் உள்ளதற்கு மாறாக கட்டிட அமைப்புகள் இருந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து உள்ளூர் திட்ட குழுமத்தினர் நேந்று இரவு கும்பகோணத் தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)