ஜெயலலிதா வுக்கு தீர்ப்பு வழங்கிய டி.குன்ஹா என்ன செய்கிறார்? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016ஜெயலலிதா வுக்கு தீர்ப்பு வழங்கிய டி.குன்ஹா என்ன செய்கிறார்?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. தீர்ப்பை அறிவிக்கும் வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்த போது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா.
டி.குன்ஹா என்ன செய்கிறார்?


ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங் களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது ஜெயலலி தாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களை ப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்து விட்டது.

2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, என்ன செய்து கொண்டி ருக்கிறார் ?

" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியைக் கவனித்துக் கொண்டு வருகிறார் குன்ஹா. அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவே தான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்து விட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்ட வில்லை' என இயல்பாகப் பேசி யிருக்கிறார். 'இது தான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.


இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமார சாமியையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார்.

'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?'

“சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்று விட்டார். பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியி லிருந்து ஓய்வு பெற்று விட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரி யாகவோ, தனி அதிகாரி யாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங் களைக் கிடப்பில் போட்டு விட்டது கர்நாடக அரசு. அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திர சேகரை (ஜெயலலிதா வுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன் படுத்திக் கொண்டது கர்நாடக அரசு.

இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ண ப்பித்தார். இந்த விண்ணப்ப த்தையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப் பித்தார்.


இந்தப் பதவியையும் சந்திர சேகருக்கு அளித்து விட்டு, குமார சாமியைக் குப்புறத் தள்ளியது அரசாங்கம். ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப் படுகிறார். மற்றவர் நிராகரிக்கப் படுகிறார். ‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்;

அப்பொழுது தான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திரு க்கிறார் போலும்.  *உண்மையும், நீதியும், நேர்மையும் என்றும் காலத்தால் அழிவதில்லை என்பதற்கு இந்த தீர்ப்பும் நல்ல எடுத்துக் காட்டு*.. விகடன்
ஜெயலலிதா வுக்கு தீர்ப்பு வழங்கிய டி.குன்ஹா என்ன செய்கிறார்? ஜெயலலிதா வுக்கு தீர்ப்பு வழங்கிய டி.குன்ஹா என்ன செய்கிறார்? Reviewed by Fakrudeen Ali Ahamed on 1/01/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚