கூச்சமில்லாம அவன் சொன்ன வார்த்தை...குழந்தை மீதான பாலியல் !





கூச்சமில்லாம அவன் சொன்ன வார்த்தை...குழந்தை மீதான பாலியல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சில தினங்களுக்கு முன்பு தன் பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சுவ தாக சொல்லி தூக்கிச் சென்ற கோபால கிருஷ்ணன் அந்த குழந்தை க்குப் பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப் படுத்திய சம்பவம் நீலகிரியில் பற்றி எரிந்து கொண்டிருக் கிறது.
''பாருங்க சார்… நல்லாப் பாருங்க இந்த முகத்த… இதுக்கு ரெண்டரை வயசுதான் ஆவுது. இன்னும் பேச்சுக்கூட முழுசா வரல. இப்பதான் நடை பழகியிருக்கு. இந்தப் பச்சை மண்ணை யாருக்காச்சும் விரசமா பார்க்கத் தோணுமா சார்.. 

படுபாவி பய, இதுகிட்டபோய் தப்பா நடந்துருக் கான். அதை நினைச்சு நினைச்சு எனக்கு மனசு தாங்கல" என மடியில் கிடத்தி யிருக்கும் குழந்தையின் முகத்தை நமக்குக் காட்டியடி ராஜகுமாரி கண்ணீர் வடிக்க இதயம் கனத்துப் போகிறது. 


நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்துள்ள எத்தமகண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். 40 வயதாகியும் திருமணமாகாத இவர், பிரபல அரசியல் கட்சி ஒன்றின் கிளைச் செயலாளர். 
சில தினங்களுக்கு முன்பு தன் பக்கத்து வீட்டுக் குழந்தையைக் கொஞ்சுவ தாகச் சொல்லித் தூக்கிச் சென்ற கோபால கிருஷ்ணன், அந்தக் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப் படுத்திய சம்பவம் நீலகிரியில் பற்றி எரிந்து கொண்டிருக் கிறது.

குழந்தையின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோபால கிருஷ்ணனை கைது செய்துள்ளது ஊட்டி அனைத்து மகளிர் காவல் துறை. பாதிக்கப் பட்ட குழந்தைக்கு ஊட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை கொடுத்து, வீட்டுக்கு அனுப்பியிருக் கிறார்கள். என்ன நடந்தது? எத்தமகண்டிக்கு நேரில் சென்றோம். 
ஊரே கொந்தளிப்பில் இருந்தது. பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டில் திரண்டிருந் தவர்களில் ஒருவர், ''அவனை யெல்லாம் தூக்குல போடணுங்க'' என்றபடி ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். 

''அந்த ஆளுக்கு வயசு நாற்ப தானாலும் இன்னும் கல்யாணம் ஆகல. எட்டு வருஷத்துக்கு முன்னாடி சின்னக் குழந்தைங் களுக்கெல்லாம் டியூஷன் எடுத்தாரு. படிக்கவந்த பெண் குழந்தைங்க கிட்ட அப்போ தப்பா நடந்துக் கிட்டாரு. 

அந்தக் குழந்தைங்க வீட்டுல வந்து சொன்னதும் பெரிய பிரச்னை யாகிடுச்சி. ஊரே திரண்டு அந்த ஆளைச் சாத்தி யெடுத்துச்சு. அதுக்கப்புறம், ஆளு இருக்குற இடம் தெரியல. காலப் போக்குல அந்தச் சம்பவத்தை யெல்லாம் மறந்துட்டாங்க. அந்த ஆளும் நல்லவனைப் போல சுத்திகிட்டு இருந்தான். 

அவன் புத்தி மாறவே யில்லைனு இப்போ தான் புரியுது" என்றார் கொதிப்புடன். பாதிக்கப்பட்ட குழந்தையின் பாட்டியிடம் பேசினோம், ''என் மகனுக்கு இரண்டு குழந்தைங்க. இரண்டாவது குழந்தை பொறந்து ஆறு மாசம்தான் ஆவுது. 

முதல் குழந்தைக்கு இரண்டரை வயசு. பக்கத்து வீடுகள்ல உள்ள எல்லோரும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவாங்க. இவளும் எல்லார் கூடவும் ஒட்டிப்பா. கோபால கிருஷ்ணனும் தினமும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவான். வீட்டுக்குத் தூக்கிட்டுப் போவான். 
அவளும் 'மாமா... மாமா'னு அவனைக் கண்டதும் தவ்வி ஓடுவா. அன்னைக்கு நானும் என் மருமகளும் வீட்டுக்குள்ள வேலை பார்த்துட்டு இருந்தோம். வெளியில விளையாடிட்டு இருந்த குழந்தையை, கோபால கிருஷ்ணன் தூக்கிக் கொஞ்சிட்டு இருந்தான். 
கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான். ரொம்ப நேரம் ஆகியும் குழந்தையைக் கொண்டு வந்து விடல. எதேச்சையா வெளியில வந்து பார்த்தப்போ அந்த ஆளு வீடு சாத்தியிருந்துச்சு. 


எங்கடா புள்ளைய தூக்கிட்டுப் போனான் வீடு சாத்திரு யிருக்கேனு யோசனை பண்ணிக்கிட்டே அவனோட அண்ணன் வீட்டுக்கு ஓடிப்போய், 'பாப்பா இங்க வந்தாளா'னு கேட்டேன். 

அவங்க, 'இல்லை'னு சொல்லிட்டாங்க. எனக்குப் பயமாயிடுச்சு. கோபால கிருஷ்ணன் வீட்டுக்கு ஓடிப்போய் கதவைத் தட்டினேன். ரொம்ப நேரம் கழிச்சு கதவைத் திறந்தான். 

பாப்பா அழுதுகிட்டே கிச்சன்லேயிருந்து ஓடி வந்துச்சு. எனக்கு மனசுக்கு சரியா படலை. வீட்டுக்குப் போனதும் குழந்தை கிட்ட கேட்டேன்.. அந்தக் குழந்தை சொன்னத என்னால சொல்ல முடியல தம்பி" என்றவர் குரலில் இருள் சூழ்கிறது.

சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தார், ''இது, என் மகனுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்னையாகிடும். அதனால என் புள்ள வர்றதுக் குள்ளயே அந்த ஆளை உண்டு இல்லைனு பண்ணிட்டு வந்திரணும்னு நானும் என் மருமகளும் அவன் வீட்டுக்குப் போனோம். 
ஆனால், அவன் அங்கே இல்லை. எஸ்கேப் ஆகிட்டான். சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிச்சோம். அன்னைக்கு முழுக்க குழந்தை ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தா. 

அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கும் முடியல. ஆத்திரத்தை அடக்க முடியாம அவன் வீட்டுக்குப் போனேன். 'டேய் என்ன காரியம்டா பண்ணி வெச்சிருக்க'னு கேட்டதுக்கு, அவன் கூச்சமே இல்லாம, ரொம்ப அசிங்கமா பேசினான். 
அதுக்கும் மேல அவனைச் சும்மா விடக்கூடாது என்ன ஆனாலும் பாத்துக்க லாம்னு தோணுச்சு. நேரா ஊட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நானும் என் மருமகளும் போய் புகார் கொடுத்துட்டோம். அவனைக் கைது பண்ணுறதுக்கு போலீஸ் கொஞ்சம் காலம் கடத்திச்சு. 


அதுக்குள்ள விஷயம் ஊர் முழுக்கத் தெரிஞ்சு போய் ஊர் மக்களெல்லாம் கூடி அவனோட காரை அடிச்சு நொறுக்கினாங்க. அவனை உடனே, 'அரெஸ்ட் பண்ணனும்'னு கோரிக்கை வெச்சாங்க. பிறகுதான் போலீஸ் அவனைப் புடிச்சிருக் காங்க. 

முன்னாடி யெல்லாம் வயசுப் புள்ளைய வெச்சிருக் கவங்க தான் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருந்தாங்க. இப்போ குழந்தையைக் கூட விட்டு வைக்க மாட்டேங்குறாங்க. அந்த அளவுக்கு கேவல மாயிடுச்சு நாடு. இதுலவேற அவன், அவ்ளோ பெரிய கட்சியில இருக்கான். 

மேலும்
அவனைக் கட்சியில சேர்த்த பாவத்துக்கு அவங்களே அவனுக்குப் பெரிய தண்டனையை வாங்கிக் கொடுக்கணும்" என்று அவர் முடிக்கும் போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சம் மனதை அரிக்க ஆரம்பித்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)