புஷ்அப்ஸ் (அ) தண்டால் எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் !

0
உடற் பயிற்சி செய்பவர் களின் நோக்கமே கட்டு மஸ்தான உடம்பு தான். ஜிம்மிற்கு சென்று தான் கட்டு மஸ்தான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. 
வீட்டில் செய்யும் உடற் பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி


என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான்.

தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங் களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற் பயிற்சி ஆகும். 

அதே சமயம் மிகவும் எளிமையாக செய்யக் கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். 

ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்ய வேண்டும். 

ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மோச மானதாக இருக்கும். 

இந்த பதிவில் புஷ் அப்ஸால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.

உடல் முழுவதற்கு மான உடற் பயிற்சி

உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற் பயிற்சியாகும். 

இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப் படுத்த உதவுகிறது. 

இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல் படவும், வலுப்படவும் உதவுகிறது.

சமநிலை மற்றும் நிலைத் தன்மையை உருவாக்கு கிறது

பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற் பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக் கூடியதாம். 


முறையான புஷ் அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்கு கிறது. 

இந்த தசை நார்கள் தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.

தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது

வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்ற மடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடு கிறது. 

தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற் பயிற்சியின் முக்கிய பணியாக கருதப் படுகிறது. 

சில புஷ்அப்ஸ் செய்வ தாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்து விடாது.

தொடர்ந்து முறையான புஷ் அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.

மேற்புற உடலமைப்பு

மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற் பயிற்சியென அனைவரா லும் நம்பப் படுகிறது. 

முறையாக புஷ்அப்ஸ் செய்யும் போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப் பெறுவதோடு 

உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப் படுகிறது. இதில் சில பக்க விளைவு களும் உள்ளது.


தசை ஏற்றத் தாழ்வுகள்

புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள் பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. 

ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

கடுமை யான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற் பகுதியை மாற்றக் கூடும்.

காயங்கள்

புஷ்அப்ஸ் தொடர்ந்து செய்பவர்கள் தினந்தோறும் அதன் எண்ணி க்கையை உயர்த்திக் கொண்டே செல்வார்கள். 

விரைவில் உடல் வலுவடைய வேண்டும் என்று இவர்கள் செய்யும் 

இந்த முயற்சி அவர்களு க்கே காயங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

தனித்துவ மின்மை

புஷ்அப்ஸ் மிகச்சிறந்த உடற் பயிற்சி என்பதில் சந்தேக மில்லை. 

அது உங்களு க்கு சிறந்த பலன்களை தரவல்லது என்பதிலும் சந்தேக மில்லை. 


ஆனால் இதன் பலனை அனுபவித் தவர்கள் இது மட்டுமே சிறந்த உடற்ப யிற்சி என்று எண்ணுவது தவறான ஒன்று. 

ஏனெனில் மற்ற உடற் பயிற்சி களும் உங்களுக்கு பலனை தரக் கூடியவை தான். 

இதனால் உடலின் கீழ்ப்பகுதி க்கு கிடைக்கும் பலன்கள் மிகக்குறைவே. 

புஷ் அப்ஸ் உடற் பயிற்சியில் ஈடுபடும் முன் சில முன்னெச் சரிக்கை களை கவனத்தில் கொள்ளுங்கள்.

அவசரம் தேவை யில்லை

உண்மை தான். நீங்கள் எத்தனை புஷ் அப்ஸ் செய்கிறீர்கள் என்பது முக்கிய மானது தான். 

ஆனால் அவசரப்பட்டு அதனை தவறான முறையில் செய்யக் கூடாது.

நேர்கோடு

உங்களுடைய கால், இடுப்பு, கழுத்து மற்றும் தலை என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி புஷ்அப்ஸ் செய்யுங்கள். 

பொறுமை யாக உடலை கீழே கொண்டு வந்து மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வரவும். 


ஒரு வேளை உங்களால் உடலை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வர இயல வில்லை என்றால் வேறு நிலைகளை முயற்சிக்கவும்.

தோளை உயர்த்தா தீர்கள்

உங்கள் உடலை தூக்கும் போது கண்டிப்பாக உங்கள் தோள் பட்டையை உயர்த் தாதீர்கள். 
தோள் பட்டையை பின்னோக்கி மட்டுமே உயர்த்த வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)