EThanthi - எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை !

Flash News

எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
ஆரோக்கியம் மற்றும் வாழும் காலத்தை அதிகரிப்ப தற்காக டயட், ஆர்கானிக் தேடல், 

யோகா என்று யார் என்ன சொன்னாலும் அதன் பின்னால் ஓடுபவர்கள் பலர். 

ஆனால், “உங்கள் ஆரோக்கிய த்துக்கு நீங்களாக என்ன செய்திருக் கிறீர்கள்?” என்றால் பதில், “ஒன்றும் இல்லை” என்பது தான். 

சரி, ஆரோக்கிய த்தை உறுதி செய்ய எதையாவது செய்தீர்களா? என்றால் அதற்கும் சரியான பதில் இல்லை.

ஆண்டுக்கு ஒருமுறை எளிய ரத்தப் பரிசோதனை செய்தால் கூட பல நோய்களை 

ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்கின்றன நவீன நோய் கண்டறிதல் முறைகள். 

ஆனால், அதற்குக் கூட நேரம் செலவழிக்க மனம் இன்றி இருப்பவர்கள் தான் 99 சதவிகித மக்கள்.

டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் முதல் புற்று நோய் வரை அனைத்தை யும் 

நம் ரத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும். 

நூற்றுக் கணக்கான நோய்களை ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 

முக்கிய ரத்தப் பரிசோதனைகள் என்னென்ன, அது எப்படி மக்களின் உயிரைக் காப்பாற்று கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கம்ப்ளீட் பிளட் கவுண்ட்

நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளை யணுக்கள், தட்டணுக்கள் 

உள்ளிட்ட வற்றின் அளவைத் தெரிந்து கொள்ள கம்ப்ளீட் பிளட் கவுண்ட் உதவும். 

அதே போல், ரத்தக் குழாய், சிறுநீரகம், கல்லீரல், ரத்த அணுக்க ளின் நிலை களையையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

கம்ப்ளீட் பிளட் கவுண்ட்டில், வெள்ளை, சிவப்பு, தட்டணுக் களின் எண்ணிக்கை, 

வகைகள், சதவிகிதம், அடர்த்தி, தரம் உள்ளிட்ட வற்றைத் தெரிந்து கொள்ளலாம். 

ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டிருக் கிறதா? ரத்தசோகை உள்ளதா? 

சிவப்பணுக் களில் இயல்புக்கு மீறிய தன்மை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள உதவும்.

ஹீமோ குளோபின் என்பது ரத்த சிவப்பணு வில் உள்ள புரதம். இது தான், 

ஆக்சிஜனைக் கிரகித்து உடல் முழுவதும் கொண்டு செல்ல துணை புரிகிறது. 

ஹீமோ குளோபின் அளவு குறைந்தால் அனீமியா இருக்கலாம். 

ஹீமோ குளோபின் பரிசோதனை யில், எவ்வளவு ஹீமோ குளோபின் உள்ளது, 

எவ்வளவு ஆக்சிஜனை அது உடல் முழுவதும் கொண்டு செல்கிறது என்று பரிசோதிக் கப்படும்.

பொதுவாக, ஒரு லிட்டர் ரத்தத்தில் 120 முதல் 180 கிராம் ஹீமோ குளோபின் இருக்க வேண்டும். 

இது வயது, பாலினத்தைப் பொறுத்து மாறுபடும். இயல்பை விட அதிக அளவில் ஹீமோ குளோபின் இருந்தால், 

அவர்களுக்கு நீரிழப்பு, நுரையீரல் நோய், அதிக அளவில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.

இயல்பை விடக் குறைவாக இருந்தால், இரும்புச் சத்து குறைபாடு, கல்லீரல் சுருக்கம், 

சிறுநீரக பாதிப்பு, எலும்பு மஜ்ஜை செயல்திறன் குறைபாடு, எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய், 

சில வைட்டமின் கள் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறை இருக்கலாம்.

பொதுவாக, கர்ப்ப காலத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாகவே இருக்கும். 

புகைப் பிடிப்பவர் களுக்கும் அதிக உயரமான இடங்களில் வசிப்பவர் களுக்கும் ஹீமோ குளோபின் அளவு சற்று அதிகமாக இருக்கும்.

நம் உடலின் முக்கிய எரிபொருள் குளுக்கோஸ். செரிமான த்தின் போது, 

கார்போ ஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. 

ராண்டம் சாம்பிளிங், குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று இதில் பலவகைப் பரிசோதனைகள் உள்ளன. 

பொதுவாக, குளுக்கோஸ் பரிசோதனை சர்க்கரை நோய் உள்ளதா என்பதைக் கண்ட றியவும், 

சர்க்கரை நோயாளி களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும் மேற்கொள் ளப்படும். 

கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணி களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும். இதைக் கண்டறியவும் பரிசோதிக் கப்படும். 

பொதுவாக, கருத்தரித்த 24 முதல் 28 வாரங்களில் இந்தப் பரிசோதனை பரிந்துரைக் கப்படும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு

சாப்பிடுவ தற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, 126 -க்கு மேலும், சாப்பிட்டு 

இரண்டு மணி நேரத்து க்குப் பிறகு 200-க்கு மேலும் இருந்தால், அவர்களு க்கு சர்க்கரை நோய் என்று அர்த்தம்.

இது தவிர, சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கு, கணையப் புற்று நோய், 

குஷ்ஷிங்ஸ் சிண்ட்ரோம் (Cushing’s syndrome), ஹைப்பர் தைராய்டிசம், கணைய அழற்சி போன்றவையும் காரணமாக இருக்கலாம். 

சில வகையான மாத்திரைகள் எடுப்பதும் கூட சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

மது அருந்துவது, போதுமான ஊட்டச்சத்து உணவு உட்கொள் ளாதது, இன்சுலின் ஊசி டோஸ் 

அதிகம் எடுத்துக் கொள்வது, ஹைபோ தைராய்டிசம், கல்லீரல் நோய்கள், சில வகையான 

மருந்துகள் எடுத்துக் கொள்வது பொன்றவை சர்க்கரை அளவை மிகவும் குறைத்து விடும்.

ஹெச்.பி.ஏ1சி பரிசோதனை

மூன்று மாத சர்க்கரை அளவைக் கண்டறிய உதவுவது ஹெச்.பி.ஏ1சி. சர்க்கரை நோய் உள்ளவர் களுக்கு, 

குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதவர் களுக்கு இது இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். 

சர்க்கரை நோயாளிகள், எந்த அளவுக்கு சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக் கிறார்கள் 

என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவும். பரிசோதனை முடிவு 6-க்கு கீழ் இருந்தால் மிகச்சிறப் பான கட்டுப்பாடு என்று அர்த்தம். 

7 முதல் 8 வரை இருந்தால் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது என்றும், 9-க்கு மேல் இருந்தால், 

சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது என்றும் அர்த்தம்.

கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile)

ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கண்டறிய மேற்கொள்ள ப்படும் ரத்தப் பரிசோதனை இது. 

இந்தப் பரிசோதனை செய்ய, குறைந்தது 9 – 12 மணி நேரங்க ளுக்குச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். 

பரிசோதனை யில், எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு 70 – 130 மி.கி/டெ.லி என்ற அளவில் இருப்பது நல்லது. 

கெட்ட கொழுப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

கல்லீரல் செயல்திறன் பரிசோதனை (Liver Function Test)

கல்லீரலின் செயல் திறனைக் கண்டறியவும் ஹெப டைட்டிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் 

இந்தப் பரிசோதனை மேற்கொள் ளப்படும். சில மாத்திரை மருந்துகள் எடுக்கும் போது, 

அது எந்த அளவுக்குக் கல்லீரலைப் பாதித்தி ருக்கிறது என்பதை அறியவும், 

கல்லீரல் நோய்க்கு அளிக்கும் சிகிச்சை யில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதா என்பதை அறியவும், 

கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட் டுள்ளதா என்பதைக் கண்டறி யவும் இந்தப் பரிசோதனை உதவுகிறது.

இதில் ரத்தத்தில் உள்ள, சில என்சைம்கள் மற்றும் புரதங்கள் பரிசோதி க்கப்படும். 

இந்த என்சைம், புரதத்தின் அளவு அதிகமா கவோ குறைவாக வோ இருப்பதை வைத்து பிரச்னைகளைக் கண்டய றிலாம். 

இதில், ஏ.எல்.டி, ஏ.எஸ்.டி, ஏ.எல்.பி, அல்புமின், பிலுருபின் உள்ளிட்டவை பரிசோதிக் கப்படும்.

ஹெபடைட்டிஸ் வைரஸ் பரிசோதனை

இதில், ஹெபடைட்டிஸ் ஏ ஆன்டிஜன், ஹெபடைட்டிஸ் ஏ-வுக்கு எதிரான ஆன்டிபாடி, 

ஹெபடைட்டிஸ் பி ஆன்டிஜன் எனப் பல பரிசோதனைகள் உள்ளன. 

இவை, ஹெபடைட்டிஸ் கிருமித் தொற்று ஏற்பட் டுள்ளதா என்பதைக் கண்டறியவும், 

சிகிச்சை எந்த அளவுக்குப் பலன் அளித்தி ருக்கிறது என்று கண்டறியவும் உதவுகிறது.

சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை

உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை சிறு நீரகங்கள் செய்கின்றன. 

இதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சீரம் கிரியாட்டினின், 

குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் (Glomerular filtration rate), பிளட் யூரியா நைட்ரஜன் (BUN) ஆகியப் பரிசோத னைகள் உதவுகின்றன.

தசைகள் உருவாக்கும் ஒருவகையான கழிவு கிரியாட்டினின். வயது அதிகரிக்க அதிகரிக்க கிரியாட்டினின் அளவு அதிகரிக்கிறது. 

பெண்களுக்கு 1.2-க்கு மேல், ஆண்களுக்கு 1.4-க்கு மேல் என்ற அளவில் கிரியாட்டினின் 

இருந்தால், சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட வில்லை என்று அர்த்தம். 

கிரியாட்டினின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க சிறுநீரகங்கள் செயல் இழப்பு எவ்வளவு என அறியலாம்.

குளோமருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் என்பது, சிறுநீரகக் கழிவுகளை மற்றும் அதிகப் படியான 

நீரை எப்படி வெளியேற்று கிறது என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை. 

ஜி.எஃப்.ஆர் விகிதம் என்பது 90 அல்லது அதற்கு மேல் இருந்தால் இயல்பு நிலை. 

15-க்கு கீழ் சென்றால் சிறுநீரகம் செயல் இழந்து விட்டது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று அர்த்தம்.

பிளட் யூரியா நைட்ரஜன் பரிசோதனை

நாம் சாப்பிடும் புரதச்சத்து உடைக்கப் படும் போது யூரியா, நைட்ரஜன் உருவாகிறது. 

யூரியா 7ம் நைட்ரஜன் 20ம் இருந்தால் இயல்பு நிலை. இது குறைந்தால் யூரியா மற்றும் நைட்ரஜன் அளவு அதிகரிக்கும்.

அலர்ஜி பரிசோதனை

ரத்தத்தில் ஐஜிஇ அளவைப் பரிசோதிக்க ஐ.ஜி.இ பரிசோதனை செய்யப் படுகிறது.

இதன் மொத்த அளவு எவ்வளவு (Total IgE), தனித்தனி ஒவ்வாமைப் பொருளுக்கு இதன் அளவு (Specific IgE) என்ன என்று 

இரண்டு விதமாகப் பரிசோதித்து, எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளது என்று கணிக்கப் படுகிறது.

ரத்தம் கல்ச்சர் (தொற்று நோய்கள்)

ரத்தத்தில் பாக்டீரியா அல்லது ஃபங்கல் போன்ற நுண்கிருமித் தொற்று இருக்கிறதா 

என்பதைக் கண்டறிய பிளட் கல்ச்சர் பரிசோதனை மேற்கொள் ளப்படும். 

பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், அவர்களுக்கு பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்று இருக்கிறது என்று அர்த்தம். 

என்ன மாதிரியான பாக்டீரியா கிருமி என்பதைப் பொறுத்து மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்பர்.

லெப்டோஸ் பைரோசிஸ், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஸ்வைன் ஃபுளு போன்ற 

காய்ச்சல் களைக் கண்டறிய பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் உள்ளன.

ஹெபடைட்டிஸ் வைரஸ் ஏ, பி, சி கிருமிகளைக் கண்டறிய தனித்தனியே பிரத்யேகப் பரிசோத னைகள் உள்ளன.

ரத்த சோகைப் பரிசோதனை

எவ்வளவு ரத்த சிவப்பணுக்கள் இருக்கின்றன, ரத்தத்தில் எவ்வளவு ஃபோலேட், வைட்டமின் பி12 

மற்றும் வைட்டமின் சி இருக்கிறது என்று கண்டறிவதன் மூலம் அனீமியாவைக் கண்டறிய லாம்.

பரிசோதனை யில், வைட்டமின் குறைபாடு காரணமாக அனீமியா ஏற்பட்டி ருக்கிறது எனக் கண்டறிந் தால், 

கூடுதலாக ஆன்டி பயாட்டிக், மெத்தில் மலோனிக் அமில சோதனை (Methylmalonic acid test) உள்ளிட்ட சில பரிசோதனை கள் செய்யப்படும்.

ஊட்டச் சத்துக்கள் பரிசோதனை

வைட்டமின்கள் ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி, டி, கே ஆகிய வைட்டமின்கள் பற்றாக் குறை இருக்கிறதா

என்பதைக் கண்டறி யவும் பரிசோதனைகள் உள்ளன. கால்சியம், பொட்டா சியம், 

இரும்புச் சத்து உள்ளிட்ட தாது உப்புக்களின் அளவைப் பற்றியும் தெரிந்து கொள்ள லாம். 

ஃபெரிட்டின் என்ற பரிசோதனை, இரும்புச் சத்து எவ்வளவு சேமித்து வைக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டறிய உதவும்.

ஹார்மோன் பரிசோதனை

வளர்ச்சியைக் கண்டறிய குரோத் ஹார்மோன், தைராய்டு சுரப்புத் தூண்டுதல் சரியாக உள்ளதா எனக் 

கண்டறிய டி.எஸ்.ஹெச், தைராய்டு சுரப்புகளின் அளவைக் கண்டறிய டி3, டி4, இனப்பெருக்க உறுப்புக் களின் வளர்ச்சி, 

இயக்கக த்தைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பு சரியாக இருக்கிறதா எனக் கண்டறிய எஃப்.எஸ்.ஹெச் பரிசோதனை மேற்கொள் ளப்படும். 

அட்ரினல், இன்சுலின் என அனைத்து ஹார்மோன் களின் அளவையும் பரிசோதனை மூலம் கண்டறிய லாம்.

இனப்பெருக்க மண்டலத்தைப் பொறுத்த வரை, ஆண்களுக்கு பி.எஸ்.ஏ, டெஸ்டோஸ்டீரான் பரிசோதனைகள், 

பெண்களு க்கு, புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் பரிசோதனை கள் மேற்கொள் ளப்படும்.

புற்றுநோய் பரிசோதனைகள்

கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) – 125: 

சினைப்பை புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை இது.

கேன்சர் ஆன்டிஜன் (சிஏ) 15-3: 

இது இயல்பான மற்றும் புற்றுநோய் செல்கள் உருவாக்கும் ஒரு வகையான புரதம். 

மார்பகப் புற்று நோயைக் கண்காணிக்க இந்தப் பரிசோதனை மேற் கொள்ளப் படுகிறது.

கேன்சர் ஆன்டிஜன் 27.29 (சி.ஏ 27.29): 

மார்பகப் புற்று நோயைக் கண்டறியவும், சிகிச்சையை கண்காணி க்கவும் உதவுகிறது.

கார்போ ஹைட்ரேட் ஆன்டிஜன் (சிஏ) 19-9: 

இந்தப் பரிசோதனை மூலம் கணையப் புற்று நோயைக் கண்டறிய லாம். 

இது தவிர, பெருங்குடல், நுரையீரல், பித்தப்பை புற்று நோய்கள், பித்தப்பை கல், கணைய அழற்சி, 

கல்லீரல் நோய்களைக் கண்டறியவும், சிகிச்சையைக் கண்காணிக் கவும் பயன்படுகிறது.

பி.எஸ்.ஏ: 

பிராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்றுநோயைக் கண்டறிய இது உதவுகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close