பசுவே இல்லாமல் தயாராகப் போகும் புதிய ரக பால் !

0
கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், மாடு முதலான எந்த விலங்குமே இல்லாமல் 


பால் தயாரிப்பதாக அறிவித்து பெருமளவில் முதலீட்டாளர் களையும், ரூ.165 கோடி முதலீடையும் ஈர்த்தது.

‘Perfect Day‘ என்ற அந்த நிறுவனம் 2014 ல் தொடங்கப் பட்டது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின், 

சமீபத்தில் எந்த விலங்குமே இல்லாமல் பால் உற்பத்தி செய்வதற் கான காப்புரிமை பெற்றது. 
இதை யடுத்து அத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்த பாலை மக்களிடம் பெரிய அளவில் எடுத்துச் செல்ல மேற்கண்ட முதலீட்டை ஈட்டியது.

பால் சந்தையின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.1,08,000 கோடி. பசு, ஆடு, செம்மறி, எருமை, ஒட்டகம், கழுதை 

மற்றும் குதிரை போன்ற விலங்குகள் மூலமாகவே பெரும்பாலும் பால் பெறப்படு கிறது.

வெகு சில நிறுவனங்கள் மட்டுமே சமீப காலங்களில், விலங்குகள் தவிர்த்து சோயா முதலிய 

சில தாவரங்களில் இருந்து பால் போன்ற திரவத்தை பெற்று பானங்கள் தயாரித்து வருகின்றன. 

தாவரங்களில் இருந்து பெறப்படுபவை பாலுக்கு உரிய புரதத்தையோ அல்லது வேறு எந்த குணங் களையோ கொண்டிருப்ப தில்லை. 

அதனால், இவை பால் என்று வகைப் படுத்தப் படுவதில்லை. ஆனால், இவை மாற்று-பால் என்று வகைப் படுத்தப் பட்டுள்ளன.

ஆனால், ‘Perfect Day’ என்ற இந்த நிறுவனம், முற்றிலும் விலங்குகள் இன்றி, தாவரமும் 


இன்றி பாலுக்கு உரிய புரதம் உட்பட அதே வேதியியல் கலவையோடு பால் தயாரிக்கிறது. 

தரமான செயற்கை முறையி லான பால் தயாரிக்கும் முறைக்கு இந்த நிறுவனம் காப்புரிமை யும் பெற்று விட்டது.

எப்படி தயாரிக்கி றார்கள்?

இந்த நிறுவனம், உண்மை யான பசுவின் பால் உற்பத்தி செய்ய நுண்ணுயிர் நொதித்தல் (Microbial Fermentation) என்றழைக் கப்படும் 

ஒரு செயல் முறையை பயன் படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக் கிறது, ஒரு மாடு கூட இல்லாமல்.

தற்போது உள்ள முறைப்படி பால் உற்பத்தி செய்ய நிறைய மாடுகள் வேண்டும். 

மாடுகளு க்கு உணவு தேவைக்கு பயிர்கள் வளர பெரிய/சிறிய நிலப்பகுதி தேவை. 

மாடுகளை கவனமுடன் கண்காணித்து வளர்க்க வேண்டும். சரியான நேரத்தில் தண்ணீர், உணவு, மருந்து கொடுக்க வேண்டும். 

மேலும், அவைகளை சினையாக்க வேண்டும். பிறகு, கன்று ஈனும் வரை காத்திருந்து, 

அதன் பின் மனிதத் தன்மை யற்று, கன்றுகளை பிரித்து பால் கறந்து விற்க வேண்டும். 
சில மாதங்களுக்கு பிறகு பால் நின்று விடும். வயதான மாடுகளை வேறு வழியின்றி இறைச்சி கடைக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், நுண்ணுயிர் நொதித்தல் முறை யானது மிகவும் எளிது. இவ்வளவு செலவு இல்லை. 

மாடு தரும் பாலில் இருக்கும் அதே புரதங்க ளுடன் பால் தயாரிக்க முடியும். 

ஆனால் மாட்டுக்கு பதில், நொதியை (Yeast) பயன்படுத்தி, அதுவும் வெறும் சில நாட்களிலேயே.

நொதியைப் பயன்படுத்தி வெதுப்பகங் களில் எப்படி ரொட்டி, கேக் போன்றவை தயாரிக்கப் படுகிறதோ, 

மது ஆலையில் எப்படி மது தயாரிக்கப் படுகிறதோ, அதே போல் பாலும் தயாரிக்கப் படுகிறது.


உணவு விஞ்ஞானிகள் நொதி (ஈஸ்ட்) மீது மரபணு கோட்பாட்டை நிரலாக்கம் செய்து திணிக்கி றார்கள். 

அதனால், பால் உருவாகத் தேவையான புரதங்களை மட்டுமே நொதி வெளி யேற்றுகிறது. 

இறுதியாக கிடைக்கும் பொருளான பாலில் நொதி சேர்வதில்லை. 

அதனால், இம்முறை மூலம் பெறப்படும் பால் மரபணு மாற்றப்பட்ட வகையிலும் சேர்வதில்லை.

பயன்கள் என்ன?

மேலும், இந்த பாலில் ஹார்மோன்கள், உயிர் எதிரி (ஆண்டி பயாடிக்குகள்), 

ஊக்க மருந்துகள் (ஸ்டெராய்டுகள்) மற்றும் கொழுப்பு களும் இல்லை. 

அதனால், நாம் அச்சமின்றி இந்த பாலை அருந்தலாம். 

புதிதாக நோய் வரும் வாய்ப்பில்லை எனினும், அதை காலம் தான் சொல்ல வேண்டும்.

எப்போது வரும்?

இவ்வகை பாலை இந்த வருடமே விற்பனை க்கு கொண்டு வருவதில் இந்நிறுவனம் முனைப்பில் உள்ளது. 

பல உணவு மற்றும் பால் விற்பனை நிறுவனங்கள் இந்த பாலை விரும்பி இந்நிறுவன த்தை அணுகி யுள்ளனர்.

இழப்பு யாருக்கு ?

இந்த பால் பரவலாக பயன் பாட்டிற்கு வந்தால், அது நிச்சயம் பால் உற்பத்தி யாளர்களை யும், 

விவசாயி களையும், விவசாயத் தையும் நேரடியாக பாதிக்கும்.

இந்நிறுவன த்தின் கூற்றுப்படி, நொதியின் மரபணு மாற்றப் படுமேயானால், 

பிற்காலத்தில், அதில் நோய் உற்பத்தி செய்யும் வகையில் கிருமி களையும் கூட சேர்த்து பால் தயாரிக்க முடியும் என்பது எனது கருத்து.

இது பரவலான நடை முறைக்கு வந்தால், முதலில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட 

கால்நடை களை பால் உற்பத்தி எனும் பேரில் செய்யும் கொடுமை பெருமளவில் குறையும். 


அதனால், கால்நடை களையே யாரும் வளர்க்க விரும்ப மாட்டார்கள். அப்படியே வளர்த்தாலும் அது இறைச்சிக் காகத் தான் இருக்கும்.

நன்மை யாருக்கு?

இது பரவலான நடைமுறை க்கு வந்தால், முதலில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட 

கால் நடைகளை பால் உற்பத்தி எனும் பேரில் செய்யும் கொடுமை பெருமளவில் குறையும். 
ஆடு, மாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டே, தங்களது குட்டிகளுக்கு, 

கன்று களுக்கு பால் கொடுக்கும். பூமிக்கு நல்லது என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. 

பெரு நிறுவனங்கள் பால் உற்பத்தியை முற்றிலும் வர்த்தக மாக செய்வதால் 

அவர்களு க்கே நன்மை. இந்நிறுவனம் கூறுவது போல் வெறும் நன்மை மட்டுமே பயக்கின், 

பால் மூலம் கலப்படத் தால் உருவாக் கப்படும் நோய்களின்றி மக்கள் நிம்மதியுடன் வாழ்வாங்கு வாழ்வர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)