பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !

0
ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், நூலகம், தியேட்டர் உள்ளிட்ட பொது கழிவறைகளை நீங்கள் பயன்படுத்தும் போது சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். 
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
காரணம் சுகாதார மற்ற கழிப்பிடங் களைப் பயன் படுத்தும் போது உங்களுக்கே தெரியாமல் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. 
சுத்த மில்லாத அத்தகைய இடங்களில் அதிகளவில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகள் உறைந் திருக்கும். 

இத்தகைய பொதுக் கழிப்பிடங் களின் சுத்தம் நம் கட்டுப் பாட்டில் இல்லை என்றாலும், சில விஷயங் களில் நாம் முன்னெச்சரி க்கையாக இருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவர் K. நாத் இது குறித்து கூறுகையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரு க்கும் இத்தகைய நோய்த் தாக்கம் இருக்கும் என்றாலும், 

பெண்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கையில் நேரடியாக அமர்வதால் நோய்த் தாக்குதலுக்கான அதிக வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது, 

எனவே வெளி யிடங்களில் பொதுக் கழிவறை களைப் பயன் படுத்தும் போது முதலில் உங்கள் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். 
எப்போதும் சானிடைஸ ர்களை (sanitisers) கைவசம் வைத்திருப்பது நல்லது.

Roca Bathrooms Products Pvt Ltd நிறுவனத்தின் நிறுவனர் கே. ரங்கநாதன் உங்கள் பொதுக் கழிவறை அனுபவம் ஆரோக்கிய மானதாக விளங்க சில குறிப்புகள் கூறுகிறார்.

கதவுகள் மற்றும் கைப்பிடிகளை எப்படி கையாள்வது?
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
பொது கழிவறை களின் கதவை நீங்கள் திறக்கும் போது அதன் கைப்பிடியை தொடாமல் திறக்க முயற்சி செய்யுங்கள். 

காரணம் அக்கதவுக ளின் கைப்பிடி களை பலரும் பயன் படுத்துவதால், வகை வகையான கிருமிகள் அதில் படிந்திருக்கும். 
அவை தொற்றுகளை ஏற்படுத்த லாம். கைப்பிடி யின் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்தபடி திறக்க முயற்சி செய்யுங்கள். 

டிஷ்யூ பேப்பர் இல்லா விட்டால் கதவைத் திறந்த பின் முதலில் கைகளை நன்றாகக் கழுவி விடுங்கள்.

சுத்தமான கழி வறையைத் தேர்ந்தெடுங்கள்
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
திரையரங்குகளில் அல்லது நூலகத்தில் உள்ள கழிவறைக்குள் நுழையும் போது முதலில் ஒவ்வொரு டாய்லெட்டையும் சரி பார்த்து,. எது சுத்தமாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துப் பயன் படுத்துங்கள். 
ஈரமான தரையோ, அல்லது முன்பு பயன்படுத்தியவர் சுத்தமாக விடாமல் சென்று விட்டாலோ அதற்குள் நுழையவே நுழையாதீர்கள். 

மேலும் பொது கழிவறை களில் இந்திய பாணியில் அமைந்துள்ள டாய்லெட்டைப் பயன் படுத்துவது நல்லது. 

வெஸ்டர்ன் டாய்லெட்டு களை வெளி யிடங்களில் பயன்படுத்து வதைக் கூடுமான வரையில் தவிர்த்து விடுங்கள். 

வேறு வழியில்லாத நிலையில், டாய்லெட் சீட்டை கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்து விட்டுப் பயன் படுத்துங்கள். 

அது கைவசம் இல்லை யென்றால் அங்கு வைக்கப் பட்டிருக்கும் டாய்லெட் பேப்பரால் இருக்கையை சுத்தமாகத் துடைத்த பின் பயன் படுத்துங்கள்.

எப்போது ஃப்ளஷ் செய்ய வேண்டும்?
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
சிலர் வெஸ்டர்ன் டாய்லெட்டில் சிறுநீர் கழித்த பின் அப்படியே அமர்ந்த நிலையில் ஃப்ளஷ் செய்வார்கள். 

இது தவறு. உள்ளாடை களை அணிந்த பின்னர், அறையை விட்டு வெளியேறும் முன், டாய்லெட் இருக்கையின் மூடியை முழுவதும் மூடிய பின்னரே ஃப்ளஷ் செய்ய வேண்டும். 
காரணம் ஃப்ளஷ் செய்யும் போது காற்றில் பாக்டீரி யாக்கள் பரவும். 

மேலும் ஃப்ளஷ் பட்டனை அழுத்தும் போதும் டிஷ்யூ பேப்பரை கைகளில் வைத்து அழுத்தவும். இதுவும் கிருமி தொற்று வதைத் தவிர்க்க உதவும்.

பொறுமை யாக காத்திருங்கள்
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
உங்களுக்கு முன்னால் ஒருவர் உள்ளே டாய்லெட்டைப் பயன்படுத்தி விட்டு வெளி யேறுகையில், நீங்கள் உடனே பாய்ந்து உள்ளே செல்லாமல் சற்று பொறுமை யுடன் காத்திருங்கள். 

அவசரம் என்றாலும் ஆரோக்கி யமும் முக்கியம் அல்லவா? ஏற்கனவே அவர் ப்ளஷ் செய்து விட்டு சென்றிருப்ப தால் கிருமிகள் காற்றில் இருக்கும் 

எனவே நோய்த் தொற்று ஏற்படலாம். ஓரிரு நிமிடங்கள் கழித்துச் செல்வது நல்லது.

கைகளை நன்றாகக் கழுவி, உலர வைக்கவும்
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
கழிவறை க்குச் சென்று விட்டு திரும்பிய 20 நொடிகளு க்குள் கைகளை நன்றாக கழுவி விடுங்கள். 

குழாய்களைப் பயன் படுத்தும் போது டிஷ்யூ பேப்பரால் அதைத் திறந்து மூடவும். ஆட்டோமெட்டிக் குழாயாக இருந்தால் பிரச்னை யில்லை. 
எப்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி உங்கள் கைகளை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். 

ஈரம் என்றால் கிருமி களுக்கு பிரியம் அதிகம் என்று சொல்லவும் வேண்டுமா?

உங்கள் உடைமைகள் பத்திரம்
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
பொது கழிவறை களைப் பயன்படுத்தும் போது உங்கள் மொபைல் ஃபோன், பர்ஸ், கைப்பை உள்ளிட்ட பொருள் களையும் பத்திரமாக பாதுக்காக்க வேண்டும். 

கிருமிகள் அதன் மீதும் படிந்து பின்னர் உங்கள் மீதும் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. 
பொது கழிவறை களின் தரை அல்லது சுவர்களில் ஒரு போதும் இவற்றை யெல்லாம் வைக்காதீர்கள். 

எல்லா வற்றையும் ஹேண்ட் பேக்கில் பத்திரமாகப் போட்டு அதன் ஜிப்பை மூடி கைப்பையை தொங்க விடுவதற்கு கதவுக்குப் பின்னால் அமைக்கப் பட்டிருக்கும் ஆணியில் மாட்டி விடுங்கள். 

சிலர் டிஷ்யூ பேப்பரால் ஹேண்ட் பேக்கை கூட துடைப்பார்கள். அவர்கள் சுத்த விஷயங்களில் தீவிரவாதிக ளாக செயல்படுபவர்கள். அவர்களை விடுங்கள். 

உங்களால் முடிந்ததை நீங்கள் செய்தால் போதும். வெளியேறும் முன் ஒரு விஷயத்தை மறக்க வேண்டாம். 
உள்ளே சென்ற அதே முறையில் டிஷ்யூ பேப்பரால் கதவின் கைப் பிடியைத் திறந்து வெளியேறுங்கள்.

கைவசம் நிச்சயம் இது தேவை
பொதுக் கழிவறைகளை பயன்படுத்துகிறீர்களா? ஜாக்கிரதை !
எப்போதும் உங்கள் கைப்பையில் ஹாண்ட் சானிடைஸர் வைத்திருங்கள். நீங்கள் போகும் எல்லா இடங்களிலும் தண்ணீர் வசதி இருக்கும் என்று சொல்ல முடியாது. 

எனவே கிருமித் தொற்றி லிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரே வழி இது தான். 
குறிப்பாக பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தி வெளியேறும் போது உங்கள் கைகளை 

ஹாண்ட் சானிடைஸர் பயன் படுத்தி சுத்தப் படுத்தினால் கிருமித் தொற்று பிரச்னையி லிருந்து தப்பித்துக் கொள்ளலாம்."
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)