ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு நடந்தது? விசாரணை விவரம் !

0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற் காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. 
ஜெயலலிதாவுக்கு 22-ம் தேதி இரவு நடந்தது?


இதுவரை 140-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வின் மரணம் குறித்து சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞராகப் பதவிவகித்த பார்த்தசாரதி கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராஜினாமா செய்தார். 

இந்த ராஜினாமா குறித்து ஆணையம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில் இதுகுறித்த சில தகவல்களும் இப்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக, நவம்பர் மாதமே பார்த்தசாரதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையரிடம் குறிப்பிட் டுள்ளார். ஆனால் ஆணையர் தரப்பில், ``நீங்கள் தொடர்ந்து பணி செய்யுங்கள்.... 

விரைவில், விசாரணை முடிவடைய உள்ளதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்” என்று சொல்லி யுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக பார்த்தசாரதி ஆணையத்தின் வழக்கறிஞராகத் தொடர்ந்து பணியாற்றிவந்தார். ஆனால், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு வந்த அன்று பார்த்தசாரதி ராஜினாமாவும் அரங்கேறியது. இதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
ஜெயலலிதா விசாரணை விவரம்
குறிப்பாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணனிடமும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடமும் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதற்கு ஆணையம் தரப்பு திட்டமிட்டிருந்தது.  அதேபோல், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்த இருந்த நிலையில், பார்த்தசாரதி ராஜினாமா கவனிக்கத் தக்க விஷயமாகிப் போனது. 

இந்நிலையில், இரண்டு முறை ஆணையத்தில் ஆஜராகிச் சாட்சியம் அளித்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன், ``ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, நான் அவ்வப் போது அறிந்து கொண்டேன்.  

அவருக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகள் அப்போலோ மருத்துவ மனையிலேயே அளிக்கப் பட்டதால், வெளிநாட்டுக்கு அவரைக் கொண்டு செல்லும் நிலை ஏற்படவில்லை” என்று தெரிவித் திருந்தார். அதேநேரம், ஏற்கெனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர் களிடம் ஆணையம் தரப்பு நடத்திய விசாரணையில் 22-ம் தேதி குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை என்கிறார்கள். 

(ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது என்பது குறித்த மர்மம் இன்றுவரை நீடித்து வருகிறது). குறிப்பாக சசிகலாவின் பிரமாண வாக்குமூலத்தில், ``இரவு பல்துலக்க, பாத்ரூமுக்குச் சென்றவர், திடீர் என `சசி... சசி...' என்று கத்தினார். நான் சென்று அவரைப் பார்த்த போது மயக்கமாகும் நிலையில் இருந்தார். 
22-ம் தேதி இரவு நடந்தது? விசாரணை விவரம்
அவரைக் கட்டிலில் படுக்க வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார். அதே நேரம் மருத்துவர் சிவக்குமார், ``மயக்க மடைந்தவுடன் பெல்லை அடித்து தனிப் பாதுகாவலர் களை நான் அழைத்தேன். 

அவருக்கு முதலுதவி சிகிச்சையும் உடனடியாக அளித்தேன். ஜெயலலிதா மயக்கம் அடைந்த போது என்மீதும், சசிகலாமீதும் சரிந்து விழுந்தார்” என்று சொல்லி யுள்ளார்.

அதேநேரம் ஓட்டுநர் கண்ணன் வாக்குமூலத்தில், ``உள்ளே அழைத்த போது ஜெயலலிதாவை சோபாவில் கிடத்தி வைத்திருந்தார்கள். 

அவர் மயக்க நிலையில் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார். அதே போல் அப்போலோ ஆம்புலன்ஸ் டிரைவரின் வாக்கு மூலத்துக்கும், அதே ஆம்புலன்ஸில் வந்த பெண் மருத்துவரின் வாக்கு மூலத்துக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

``ஜெயலலிதா, ஃபைல் பார்க்கும் டேபிளில் அமரவைக்கப் பட்டிருந்தார்; பேனா மூடி திறந்திருந்தது” என்கிற ரீதியில் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 



இவை யனைத்தும் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ``ஜெயலலிதா, அப்போலோவில் இருந்த நாள்களை விட போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்காத நிலையே இருக்கிறது. 

ஜெயலலிதாவுக்குத் திடீர் என மயக்கம் ஏற்பட்டிருந்தாலும், மயக்கம் ஏற்பட்ட பிறகு சில மணித்துளிகள் என்ன செய்வது என்பதில் சசிகலா தரப்பு குழப்பத்தில் இருந்திருக்கிறது. 

அந்தக் குழப்பங்கள் தாம் இப்போது வாக்கு மூலங்களில் வெளியாகி இருக்கின்றன” என்கிறார்கள் ஆணையத்தின் தரப்பில்.
விசாரணை விவரம்
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள தாகக் கூறப்படுகிறது. ஆணையத்தின் விசாரணையில், அப்போலோ மருத்துவர்கள் அளித்த வாக்கு மூலத்திலும் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. 

சசிகலாவினால் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்க அழைத்து வரப்பட்ட அமெரிக்கவாழ் இந்திய மருத்துவர் ஷமிம் ஷர்மாவின் மருத்துவ ஆலோசனைகள் ஒரு கட்டத்தில் அப்போலோ நிர்வாகத்தி னால் கண்டு கொள்ளப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் பதிவு செய்யப் பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது. ஆணையத்தின் விசாரணை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)