கத்தாரில் தான் பிஃபா 2022 நடக்கும் - அரபு தேசத்தின் எழுச்சி !

0
2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உற்சாக மாகத் தயாராகி வருகிறது கத்தார். 


இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கு றாண்டா...’ என்பது போல, நாலா புறமும் நெருக்க டியைச் சந்தித்து வந்தாலும், 

ஆக வேண்டிய வேலை களைக் கண்ணும் கருத்து மாகச் செய்து வருகிறது கத்தார்.

உலகக் கோப்பையை நடத்தும் முதல் வளைகுடா நாடு; உலகக் கோப்பையை நடத்தும் குட்டி நாடு... 

இப்படி பல்வேறு சிறப்பம் சங்களைத் தன்னுள் அடக்கி யுள்ளது கத்தார். 

ஆனால், இந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. 

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுக ளுடன் போராடி 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 

நடத்தும் வாய்ப்பைப் பெற்றது. முழுவீச்சில் அதற்கான ஏற்பாடு களை மேற் கொண்டது.

எதிர் பாராத விதமாக, 2017-ம் ஆண்டு கத்தாருக்கு மிகப் பெரிய நெருக்கடி சூழல் ஏற்பட்டது. 

அதுவும் தன் அண்டை நாடுகளால். ஆம், ஜூன் 5, 2017 - கத்தாரு டனான அனைத்து உறவு களையும் 


சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய அண்டை நாடுகள் துண்டித்துக் கொண்டன. 

அரசியல், வர்த்தகம், போக்கு வரத்து ஆகிய அனைத்து உறவு களையும் துண்டித்து கத்தாரை தனிமைப் படுத்தின.

“கத்தார் தீவிரவாத த்துக்கு ஆதரவளி க்கிறது; இரானுடன் நெருக்க மாக இருக்கிறது” என்பதே 

கத்தார் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டு. `அல் ஜசீரா தொலைக் காட்சியை நிறுத்த வேண்டும், 

இரானுட னான உறவு களைத் துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனை களை விடுத்து, 

அதற்கு ஒப்புக் கொண்டால் அனைத்து தடைகளும் நீக்கப்படும் என்று அவை கத்தாரு க்கு கெடு விதித்தன. 

ஆனால், அண்டை நாடுகள் முன் வைத்த குற்றச் சாட்டு களைத் திட்ட வட்டமாக மறுத்த கத்தார், 

அவற்றின் நிபந்தனை களையும் ஏற்க மறுத்து விட்டது. ‘உங்கள் நிபந்தனை களை ஏற்றுக் கொள்ள முடியாது. 
இது எங்கள் இறை யாண்மை க்கு விடுக்கப் பட்ட சவால்’ என்று சூளுரை த்தது கத்தார்.

பதிலுக்கு சவுதி உள்ளிட்ட நாடுகள் `கத்தாருக்கு எதிராகப் புதிய அரசியல் மற்றும் 

பொருளாதார நடவடிக் கைகளை எடுக்கப் போகிறோம்’ என்று அச்சுறுத்தின. கத்தார் கண்டு கொள்ள வில்லை.


விமானப் போக்கு வரத்து துண்டிக்கப் பட்டதால் கத்தாரி லிருந்து வெளியூர் களுக்குச் 

செல்பவர் களும் கத்தாருக்கு வருபவர் களும் சிரமத்து க்கு ஆளானார்கள். 

துபாயி லிருந்து இறக்குமதி செய்யப் பட்ட உணவுப் பொருள்கள் நிறுத்தப் பட்டதால் 

பால், காய்கறி உள்ளிட்ட பொருள் களுக்கு கத்தாரில் தட்டுப்பாடு நிலவியது. 

ஆனால், அனைத் தையும் சில மாதங்களில் சரி செய்து விட்டது கத்தார். ஒரு சின்ன உதாரணம்... 

2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு பால் பண்ணைக்கூட இல்லாத நாட்டில் 

சில மாதங்களில் 10,000 கால்நடைகள் இறக்குமதி செய்யப் பட்டன. 

இப்போது தன் நாட்டு மக்களுக் கான பால் தேவையை வெளி நாடுகளை சார்ந்திராமல் கத்தாரே பூர்த்தி செய்கிறது.

வான்வழி, கடல்வழி போக்கு வரத்தை அண்டை நாடுகள் துண்டித் தாலும், 

இரானின் வழியாகப் போக்கு வரத்தை உருவாக்க முயன்று வருகிறது. 

இப்போது ஃபிஃபா விஷயத்துக்கு வருவோம்...

2022-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கத்தார் தலைநகர் தோகாவில் கால்பந்து உலகக் கோப்பை தொடங்கு கிறது. 

இதனிடையே `2022 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் 48 அணிகள் இடம்பெற வாய்ப் புள்ளது. 

அதற்கான சாத்தியங் களைப் பார்த்து வருகிறோம்’ என்று ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறினார். 

இதனால் கத்தார் மீண்டும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. 


அங்கு முன்னரே அறிவிக்கப் பட்டபடி சர்வதேச தரத்திலான 9 கால்பந்து மைதானங்கள் தயாராகி விட்டதா? 

அண்டை நாடுகள் விதித்த தடைகளி லிருந்து கத்தார் மீண்டு வந்ததா இல்லையா? 

இந்தக் கேள்வி களுக்கு கத்தாரில் வசிப்பவர் களால் தான் சரியான பதிலளிக்க முடியும். 

எனவே, கத்தார் தலைநகர் தோகாவில் வசித்து வரும் சென்னை இளைஞர் தினேஷை தொடர்பு கொண்டு பேசினோம்...

`அண்டை நாடுகள் விதித்த தடைகள் கத்தாரில் எந்த வித பெரிய பாதிப்பு களையும் ஏற்படுத்த வில்லை. 

விமானப் போக்கு வரத்து மட்டும் தான் கொஞ்சம் பாதிக்கப் பட்டுள்ளது. மற்றபடி இங்கு எந்தவித பிரச்னையும் இல்லை. 

ஃபிஃபாவுக் காக முழுவீச்சில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மெட்ரோ வேலையும் முடியும் தருவாயில் உள்ளது. 

சில நாள்களில் செயல் பாட்டுக்கு வந்துவிடும். உணவுப் பொருள்களு க்கும் எந்தத் தட்டுப் பாடும் இல்லை. 

ஃபிஃபா ஏற்பாடுகளில் தான் சின்னச் சின்ன சிக்கல் ஏற்பட் டுள்ளது. முன்னர் 36 அணிகள் பங்கு பெறுவதாக இருந்தது. 

அதற்கேற்ற படி ஸ்டேடியம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வற்றை கத்தார் ஏற்பாடு செய்து வந்தது. 

ஆனால், ஃபிஃபா அணிகளின் எண்ணிக் கையை 48 ஆக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது. 

16 அணிகள் கூடுதலாகச் சேர்த்தால் போட்டி களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மைதானங் களின் தேவை எண்ணிக்கை யும் அதிகரிக்கும். இங்கு 9 மைதானங்கள் தான் உள்ளன. 

எனவே ஃபிஃபா மற்ற வளைகுடா நாடுகளுடன் போட்டி உரிமையைப் பகிர்ந்து கொள்ள கத்தாரிடம் பேசி வருகிறது. 

அதாவது, பாதி போட்டிகள் இங்கேயும் மீதி போட்டிகள் மற்ற வளைகுடா நாடுகளிலும் நடக்கும். 

ஃபிஃபாவின் இந்தத் திட்டத்துக்கு கத்தார் ஒப்புக் கொள்ள வில்லை. “2022 உலகக் கோப்பை கத்தார் மண்ணில் தான் நடக்க வேண்டும். 

நாங்கள் புதிதாக மைதானம் கட்டத் தயார். போட்டி தேதிகளை மட்டும் கொஞ்சம் தள்ளி வையுங்கள். 

அனைத்து ஏற்பாடு களையும் செய்து முடிப்போம்” என்று சொல்லி விட்டது. என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிய வில்லை. 


என்ன நடந்தாலும் கத்தார் அரசு சமாளித்து விடும் என்று நினைக் கிறேன்” என்றார் நம்பிக்கை யுடன்.

உலகக் கால்பந்து போட்டியில் பங்குபெறாத ஒரு சிறிய நாடு, பணத்தை வாரி இரைத்து 

சர்வதேச தரத்தில் மைதானங் களை அமைக்கிறது. உலகக் கோப்பை முடிந்ததும் 

அந்தப் பிரமாண்ட கால்பந்து மைதானங் களுக்கு வேலை யில்லை. 

ஆனாலும் புதிதாகக் கால்பந்து மைதானங்கள் அமைக்கவும் நாங்கள் தயார் என்கிறது. 

கிடைத்த உரிமத்தை பங்குபோட மாட்டோம் என்றும் உறுதி யாகக் கூறியிருக் கிறது. 

கத்தாரின் தனித்துவம் இதுதான். எந்தச் சூழலிலும் யாருக்கும் தலை வணங்காது. 

படிந்தும் போகாது. இந்தத் தனித்துவம் தான் பிற வளைகுடா நாடுகளின் பிரச்னை.

’கத்தாரில் உலகக் கோப்பை நடக்கும். இது வளைகுடா நாடுகளின் பெருமை. 

உலக கால்பந்து ரசிகர்க ளுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். 2022-ம் ஆண்டு கத்தாரு க்கு வாருங்கள். 

சிறந்த அனுபவ த்தைப் பெறுவீர்கள்’ என்று வாக்கு கொடுத்தி ருக்கிறார் கத்தாரின் அமிர். 

இந்த வாக்கை கத்தார் காப்பாற்றுமா என்பதைப் பொறுத் திருந்து பார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)