கடன் வாங்கியாவது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் - நீதிமன்றம் !

0
மனைவி குழந்தைகளைப் பராமரிப்பதே கணவனின் தலையாய கடமை, அதற்காக கணவர் கடன் வாங்கலாம், யாசகம் பெறலாம் 


ஏன் திருடக்கூடச் செய்யலாம் என பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை விட்டுப் பிரிந்த கணவர் தனக்கு 

தர வேண்டிய மாதாந்திர ஜீவனாம்ச தொகையை பல மாதங்களாகத் தரவில்லை. 

ரூ.91,000 நிலுவையில் உள்ளது என குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. 

இதனை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எஸ்.மதன், மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தார்.


மேலும் அவர் கூறும் போது, "இந்த நபரை சிறைக்கு அனுப்புவது அவர் அவரது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகவே.

குற்றஞ் சாட்டப்பட்டுள்ள நபர் எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமலே அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்காமல் தவிர்த் திருக்கிறார்.

மாதாந்திர ஜீவனாம்சம் என்பது கணவனைப் பிரிந்த பெண் தனது குழந்தை களுடன் அடிப்படை பொருளாதார தேவைகளை 

பூர்த்தி செய்து வாழ்வதற் காகவே. புறக்கணிக்கப் பட்ட மனைவியும் குழந்தையும் நிதி ஆதாரம் இல்லாமல் எப்படி வாழ முடியும்.

மனைவி குழந்தைகளைப் பராமரிப்பதே கணவனின் தலையாய கடமை. அதற்காக கணவர் கடன் வாங்கலாம், யாசகம் பெறலாம் ஏன் திருடக்கூடச் செய்யலாம்" என்றார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)