ஆறு வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பிகாசோ ஓவியம் !

0
உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சி யகங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.
எனினும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் குன்ஸ்தல் அருங்காட்சிய கத்தில் வைத்து 

குறித்த 7 ஓவியங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளது.


அதனை தொடர்ந்து புகழ்பெற்ற இவ் ஓவியங்களை கண்டு பிடிப்பதற்கு தனி குழு ஒன்று அமைக்கபட்டு தேடுதல் பணி இடம் பெற்றது.

ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால் திருட்டுபோன ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட வில்லை.

இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டு களுக்குப் 

பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் நேற்றைய முன்தினம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டு பிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.


தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், 

பிகாசோவின் ஓவியம் தானா? என உறுதிப் படுத்தப்பட்ட பிறகு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)