கஜா புயல் - மின் வாரியத்தின் எச்சரிக்கை !





கஜா புயல் - மின் வாரியத்தின் எச்சரிக்கை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
இடி, மின்னலின் போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற 
சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

வட கிழக்குப் பருவமழை ,மற்றும் வெள்ள காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க 


பொது மக்களுக்கான விழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா. சங்கரன் அவர்கள் தெரிவித்திருப்பது:

மழைக் காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், மின் கம்பத் தாங்கு கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். 

மழையாலும், பெருங்காற்றாலும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், அதன் அருகே செல்ல வேண்டாம். 

அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலக த்துக்கு தவறாமல் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.

இடி, மின்னலின் போது திறந்தவெளியில் இருக்க வேண்டாம்.

அத்தருணத்தில் உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு, உலோகத்தால் 

மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடையலாம். 

இடி, மின்னலின் போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம்.

மேலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிளை விட்டு அகல வேண்டும். 

இடி, மின்னலின் போது தஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை 

இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கணினி கிரைன்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். 

மேலும் திறந்த வெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்ற வற்றின் அருகில் இருக்க வேண்டாம்.

அவசர காலத்தில் தொடர்பு கொள்ள...

மழை, வெள்ளம் மற்றும் அவசர காலத்தில் கோட்ட செயற்பொறி யாளர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப் பேசி எண்கள்:

மாநில அளவிலான உதவிக்கு - 1070

மாவட்ட அளவிலான உதவிக்கு - 1077

தஞ்சாவூர் - 9445853742,

தஞ்சாவூர் நகரியம் - 9445853731,

பட்டுக்கோட்டை - 9445853846,

ஒரத்தநாடு - 9445853818,

கும்பகோணம் - 9445853772,

கும்பகோணம் வடக்கு - 9445853796.

உதவிச் செயற் பொறியாளர் களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
தஞ்சாவூர் 9445853744,

தஞ்சாவூர் நகரியம் - 9445853732,


தஞ்சாவூர்புறநகர் - 9445853745,

திருவையாறு - 9445853743,

பட்டுக்கோட்டை நகரம் - 9445853850,

பட்டுக்கோட்டை புறநகர் - 9445853848,

மதுக்கூர் - 9445853847,

பேராவூரணி - 9445853849,

ஒரத்தநாடு நகரம் - 9445853819,

ஒரத்தநாடு புறநகர் - 9445853820,

சாலியமங்கலம் - 9445853821.

கும்பகோணம் நகரம் - 9445853773,

கும்பகோணம்புறநகர் - 9445853774,

பாபநாசம் - 9445853775,

கும்பகோணம் வடக்கு - 9445853797,

கும்பகோணம் தெற்கு - 9445449278.


கடலூர் - 9443435879-7402606213

பண்ருட்டி - - 9940779045

காட்டு மன்னார் கோவில் - 7402606221

பரங்கிப் பேட்டை - 9445029458

விருத்தாசலம் - 9942354568, 9500337344

கடலுார் 1, 2 - 9444094257

சிதம்பரம் - 9486647087

புயல். மழை. வெள்ளம் காலங்களில் கவனமுடன் இருப்போம். விபத்துகளை தடுப்போம..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)