மக்கள் கஜாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - வானிலை !

0
கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. 
அந்த 4 மணி நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதையடுத்து வேகமாக கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. 


21 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

எப்போது கடக்கும்

இந்த புயல் சரியாக இன்று இரவு 7 மணிக்கு தீவிரம் அடையும். அதன்பின் 11 மணி வரை இந்த புயலின் வீரியும் இருக்கும். 

11 மணிக்கு இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

மணி நேரம் மோசமாக இருக்கும்

மொத்தம் 4 மணி நேரம் இந்த புயல் தமிழகத்தில் இருக்கும். இதனால் 4 மணி நேரம் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். 

இந்த நான்கு மணி நேரம்தான் மிக முக்கியமான நேரம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


வேகமாக காற்று வீசும்

இந்த நேரத்தில்தான் புயல் முழுவேகத்தை அடையும். இதனால் கடலூர் பாம்பன் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. 

மற்ற கடலோர மாவட்டங் களிலும் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்.

பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

இந்த நான்கு மணி நேரமும் அதிக பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த ப்பட்டுள்ளது. 


11 மணிக்கு புயல் கரையை கடந்த பின் இன்னும் அதிக மழை பெய்யும் என்பதால், 

அப்போதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)