பாஜக ஆபத்தானதா? - விமான நிலையத்தில் ரஜினி பதில் !

0
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தியது சரியில்லை, நிறைய அதுகுறித்துப் பே சவேண்டியுள்ளது என ரஜினி பேட்டி அளித்துள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நீண்டகாலமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிவந்த ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். 

பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கினார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நான் நிரப்புவேன், 

அதற்காகத் தான் அரசியலுக்கு வருகிறேன், ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவேன் என்று அப்போது பேசினார்.

தமிழக அரசியலில் இறங்கும் ரஜினி அவ்வப்போது மட்டும் தேவையான சமயங்களில் மட்டுமே கருத்து தெரிவித்து வருவதாக ஒரு விமர்சனம் உண்டு. 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களை ரஜினி சந்தித்தார் .

அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:

ஏழு பேர் விடுதலை தொடர்ந்து தாமதமாகிறதே உங்கள் கருத்து?

எந்த ஏழுபேர்

ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேர்?

எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன்.

அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

இப்பத்தானே என்னிடம் கேட்கிறீர்கள் அதை


சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறதே?

அதற்கு கடுமையான சட்டம் கொண்டு வரணும், அது மட்டுமல்ல அதை கடுமையாக அமல் படுத்தணும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிறது, இப்ப உங்கள் நிலைப்பாடு என்ன?

அதை நடைமுறைப் படுத்திய விதம் தப்பாகி விட்டது. அதைப் பற்றி விரிவாக பேச வேண்டிய விஷம்.

7 பேர் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

அதைப்பற்றி எனக்கு இப்பத்தான் கேள்விப்பட்டேன்னு சொல்கிறேனே

பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, பாஜக அந்த அளவுக்கு ஒரு ஆபத்தான கட்சியா?

அப்படி தான் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள், அப்படியானால் கட்டாயம் அப்படித் தானே இருக்க முடியும்?

இவ்வாறு ரஜினி பேட்டி அளித்தார்.


பாஜகவை ஆபத்தான கட்சி என்று ஆமோதித்தும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல் படுத்தியதில் தவறு இருக்கிறது என்றும் 

பாஜகவுக்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)