வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் !





வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், 
24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்றார். 

படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிட்ட அவர், 


இன்று தென் கிழக்கு, தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், என தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளதாகவும், 

எனினும் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். 

சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இதனிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தர விட்டுள்ளார். 

எனினும், ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். 


கொடைக்கானல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 

மறுசீரமைப்பு நிறை வடையாத பகுதிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே விடுமுறை குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)