வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் கதிர்வீச்சு எவ்வளவு? அறிந்து கொள்ள !

0
வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு அளவு பற்றி பொது மக்களே தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் கதிர்வீச்சு எவ்வளவு? அறிந்து கொள்ள !
மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

செல்போன் கதிர் வீச்சால் புற்றுநோய் ஏற்பட்ட தாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப் பட்ட டவரை அகற்று மாறு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதை தொடர்ந்து, பொது மக்களே தங்கள் பகுதியில் எந்தெந்த மொபைல் டவர்கள் உள்ளன, 

அவற்றின் கதிர்வீச்சு எவ்வளவு, அலைவரிசை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள தரங்சஞ்சார் என்ற இணையதளத்தை தொலைத் தொடர்பு துறை துவக்கியுள்ளது. 
மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா இதை துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில், 

மொபைல் போன் வாடிக்கையாளர்களிடையே கதிர்வீச்சு பற்றிய அச்சத்தை போக்கி தெளிவுபடுத்தவும், கதிவீச்சு அளவை தெரிந்து கொள்ளவும் இணையதளம் உதவும் என்றார்.
வீட்டுக்கு அருகில் உள்ள மொபைல் டவரில் கதிர்வீச்சு எவ்வளவு? அறிந்து கொள்ள !
தொலைத் தொடர்பு துறை செயலாளர் பி.கே.புஜாரி பேசுகையில், ‘மொபைல் டவர் தர நிலை களை பொறுத்த வரை, இதற்கான விதிகள் சர்தேச நாடுகளை விட 10 மடங்கு அதிக கெடுபிடி கொண்டவை. 

உலக சுகாதார நிறுவன பரிந்துரைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தரங் சஞ்சார் இணைய தளத்தில் வாடிக்கை யாளர்கள் தங்கள் மொபைல் எண், இ-மெயில் விவரங்களை பதிவு செய்து, 

தங்கள் பகுதியில் உள்ள டவர், அதில் வெளிப்படும் கதிர்வீச்சு அளவு, டவரை நிறுவிய நிறுவனம் ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)