செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம் !

0
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வ தற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்ட மிட்டுள்ளது. 
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா 


என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. 

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,

கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. 

செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை பற்றிய தகவல் களையும், புகைப் படங்களையும் இந்த விண்கலம் அனுப்பி வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆய்வை மேம்படுத்தும் விதமாக திரளான ரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்தில் உலவ விட ஆராய்ச்சி யாளர்கள் முடிவு செய்துள்ளனர். 


இதற்கான நாசாவின் நிதி உதவியுடன் ரோபோ தேனீக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

செவ்வாயில் உலவுவதற் கான திறன்களுடன் உருவாக்கப் படும் இந்த ரோபோக்கள், மின்னேற்றம் மற்றும் 

தகவல்களை பரிமாறிக் கொள்வதற் கான மையமாக கியூரியாசிட்டி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)