செவ்வாய் கிரகம் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் கொள்கிறது நாசா?





செவ்வாய் கிரகம் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் கொள்கிறது நாசா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நமது சூரிய மண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ்வாயாகத் தான் இருக்கும். 
மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது பூமியை சுற்றி வரும் ஒரு துணைக்கோள் மட்டுமே. 

புதன், வெள்ளி (சுக்கிரன்) ஆகியவை மனிதன் போக முடியாத இடங்கள். 

சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால் புதன் கிரகம் வெப்பம் பூமியில் உள்ளதை போல 11மடங்கு அதிகமாக இருக்கும். 

மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால் அது அதைவிட மோசமான பருவநிலையை கொண்டுள்ளது. 

அங்கு காற்றழுத்தம் மிக அதிகம். ஆளில்லாத விண்கலம் வெள்ளியில் போய் இறங்கினாலும் கடும் அழுத்தத்தால் விண்கலம் தூளாக நொறுங்கி விடும். 

சரி... வெப்பம், காற்றழுத்தம் குறைவான கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ்வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனியை ஆராய்ந்தால் அங்கு வேறு மாதிரியான சூழ்நிலை. 


அதாவது பனிக்கட்டி உருண்டைகளாக அவை இருக்கின்றன. ஆளில்லா விண்கலம் அங்கு போய் இறங்கினால் அவை புதை சேற்றுக்குள் சிக்கியது போல புதைந்து விடும்.

அதனால் தான் சூரியமண்டல கிரகங்களில் செவ்வாய் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கிறது. 

அதனால் தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி அவ்வப்போது 

ஆளில்லா விண் கலன்களை அனுப்பி மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலை களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)