தம்மடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டு விட உதவும் யோகா !

0
யோகா செய்வதால் புகைப் பிடிக்கும் பழக்கத்தி லிருந்து விரைவில் மீண்டு விடலாம்  என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.


இந்த ஆய்வானது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சுமார் 1,021 பேரிடம் எடுக்கப் பட்டது.

கடந்த இரண்டு வருடங்களில் இவர்கள் அனைவரு க்கும் யோகா சொல்லித் தரப் பட்டது.

இதனை அவர்கள் அனைவரும் தினசரி செய்கிறார்களா? என்பது ஒரு மாதத்திற்கு கண்காணிக்கப் பட்டது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து யோகா செய்து வந்த 1,021 பேரில் 62 சதவீதம் பேர் புகைப் பிடிக்கும் பழக்கத்தி லிருந்து மீண்டு விட்டதாக தெரிவித் துள்ளனர்.

7.49 சதவீதம் பேர் 2 முதல் 6 மாதங்களி லும்,15.47 சதவீதம் பேர் 12 மாதத்தி லிருந்தும் புகைப் பழக்கத்தை விட்டு விட்டதாக கூறியுள்ளனர்.


இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்கள் இந்தியா வின் 25 மாநிலங்களி லிருந்தும், 

இரண்டு யூனியன் பிரதேசங்களி லிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

யோகாவுடன்,இயற்கை உணவு முறையையும் பின்பற்றினால் புகைப் பிடிப்பது மட்டு மல்லாமல்,

எந்த போதை பழக்கமாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விடலாம் என இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)