டிஎம்சி என்றால் என்ன? எவ்வளவு தண்ணீர் தெரியுமா?

0
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி நீர் ஆகும். ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதின் சுருக்க வடிவமே டிஎம்சி.
டிஎம்சி என்றால் என்ன? எவ்வளவு தண்ணீர் தெரியுமா?
1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும். 

1 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே சென்னை மாநகர் முழுவதும் ஒரு மாதத்துக் கான

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்,  கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி ஆகும். மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும்.

உண்மையை சொல்ல வேண்டு மென்றால் 2 கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஒப்பானது நமது மேட்டூர் அணை ஆகும்.

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அணையாக இருப்பது நமது மேட்டூர் அணை தான். 
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப் பட்டு சரியாக 9 ஆண்டுகளு க்கு பிறகு தான் பணி நிறை வடைந்தது.

1934ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப் பட்டது. மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது. 

தமிழக த்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங் களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)