மாத்திரைகள் மூலம் செல்லும் மருத்துவ ரோபாட்டுகள் !





மாத்திரைகள் மூலம் செல்லும் மருத்துவ ரோபாட்டுகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தாவரங்களின் இலை, தண்டுகளின் சாறுகள் அல்லது வேர்கள் மற்றும் மரப்பட்டைகளின் தூள் 
ஆகிய வற்றைக் கொண்டு பல நோய்களுக் கான சிகிச்சை களை கண்டறிவதில் தொடங்கியது மனிதர்களின் மருத்துவப் பயணம். 

ஆனால் இன்று, மனிதனின் கண்டு பிடிப்பான செயற்கை நுண்ணறிவுசார் கருவிகள், புற்றுநோய் போன்ற 

உயிர் கொல்லி நோய்கள் வருமுன் காக்க நமக்கு உதவுவது முதல், அவற்றுக்கான மிகச்சிறந்த சிகிச்சை களை உருவாக்கவும் பயன்படு கின்றன.


வருகிற 2030-ம் ஆண்டில், நுண்ணிய ரோபாட்டுகள் நம் உடல் முழுக்க வலம் வந்து நோய்க் கிருமிகளை, நோய்களை கண்டறியும். 

மேலும் உடலில் தேவையான இடங்களு க்குக் மருந்துகளை கொண்டு சேர்ப்பது வரை 

பல மருத்துவச் செயல் பாடுகளை மேற்கொள்ளும் என்கிறார் பிரபல எதிர்காலச் சிந்தனை யாளர் ரே கர்ஸ்வெய்ல்.

உடலுக்குள் மருந்துகளைத் தாங்கிச் செல்லும் ரோபாட்டு களை, உடலில் மருந்துகள் தேவைப்படும் 

பகுதிகளுக்கு மட்டும் செலுத்துவதற் கான வழியை விஞ்ஞானி களால் இது வரை கண்டுபிடிக்க முடிய வில்லை. 

ஆனால் இந்த பிரச்சினைக் கான ஒரு சுலபமான தீர்வை சர்க்கரை மாத்திரைகள் மூலமாகக் கண்டு பிடித்துள்ளதாக 

கூறுகின்றனர் அமெரிக்கா வின் சாண்டியாகோவி லுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குழுவினர்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இதே ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஒரு முந்தைய ஆய்வில், நுண்ணிய மோட்டார்கள் கொண்ட, 

தன்னைத் தானே உந்தித் தள்ளிக் கொள்ளும் திறன் கொண்ட ரோபாட்டுகள் மீது அல்சர்களுக் கான 

ஆண்டி பயாடிக் மருந்து களைப் பூசி அவற்றை எலிகளின் உடலுக்குள் செலுத்தி அவற்றின் குடற்புண் களைக் குணப் படுத்த முயன்றனர்.

மருந்துகளைத் தாங்கி எலிகளின் உடலுக்குள் சென்ற நுண் ரோபாட்டுகள் எதிர் பார்த்த படியே அல்சர்களைக் குணப்படுத்தின என்றாலும், 

துரதிர்ஷ்டவசமாக எலிகளின் செரிமான திரவம் மற்றும் குடல் திரவங்கள் காரணமாக, 

நுண் ரோபாட்டுகள் புண்களை அடையு முன்பே மருந்துகளை வெளியேற்றியது. 

அது மட்டு மல்லாமல், தண்ணீருடன் கலந்து செலுத்தப்பட்ட சில நுண் ரோபாட்டுகள் 

எலிகளின் தொண்டையில் சிக்கிக் கொண்டு செயலிழந்து போனதும் கண்டறியப் பட்டது. 

இந்த நடைமுறைப் பிரச்சினைக்கு தீர்வுகாண, ஆய்வாளர்கள் லேக்டோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய 

இரண்டு சர்க்கரை களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மாத்திரை களில் ஆயிரக்கணக் கான நுண்ணிய மோட்டார்களை பொருத்தினர்.

அதனை அடுத்து, மோட்டார்கள் பொருத்தப் பட்ட மாத்திரைகள் சோதனைக் கூட எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப் பட்டன. 

இந்த ஆய்வில், சிலிக்காவி லிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் நுண்ணிய மோட்டார்கள் கொண்ட மாத்திரை களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 

சர்க்கரை யிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் நுண்ணிய மோட்டார்கள் பொருத்தப் பட்ட ரோபாட்டுகள் 

அவை தாங்கிச் சென்ற மருந்துகளை குறிப்பிட்ட உடல் பகுதிகளில் வெற்றிகர மாக சேர்த்தன என்பது கண்டறியப் பட்டு உறுதி செய்யப் பட்டது.

லேக்டோஸ் மற்றும் மால்டோஸ் ஆகிய இரு சர்க்கரை களும் மாத்திரை வடிவ மருந்து ரோபாட்டுகள் 


உற்பத்திக்கு பயன்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம் என்றால், முதலில் அவை விஷத்தன்மை இல்லாதவை. 

இரண்டாவ தாக, அவற்றை மிக சுலபமாக மாத்திரை களாக உற்பத்தி செய்ய முடியும். மூன்றாவதாக, இம்மாத்திரை களை தேவையான சமயத்தில் அழித்து விட முடியும். 

இந்த மூன்று பொன்னான காரணங்கள் கொண்ட சர்க்கரை மாத்திரைகள் மூலம் அல்சர் மட்டு மல்லாமல் 

புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான மற்றும் உயிர் கொல்லி நோய்களுக் கான மருந்துகளைத் தாங்கிச் செல்ல உதவும். 

இந்த நுண்ணிய ரோபாட்டுகள் விரைவில் மனிதர்களின் உடலுக்குள்ளும் சுற்றித் திரிந்து 

அவசியமான உடல் பகுதிகளில் மருந்துகளை செலுத்தி நோய்களை விரைவில் குணப்படுத்த லாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)