பைக், கார் வாங்கும் போதே பதிவுச் சான்று - அரசு திட்டம் !





பைக், கார் வாங்கும் போதே பதிவுச் சான்று - அரசு திட்டம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சராசரியாக ஒரு நாளைக்கு 7,434 பேர் புதியதாக வாகனங்களைப் பதிவு செய்கின்றனர். 
வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், உரிமை யாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. 

இந்நிலையில் புதிதாக வாகனங்களை வாங்கும் போது இதர கட்டணமாக விற்பனை யாளர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

வண்டியின் விலை, சாலை வரி உட்பட அனைத்து வகை கட்டண த்தையும் சேர்த்து மொத்த விலை கொண்ட விலைப் பட்டியல் அளிக்கப்படு கிறது. 


கூடவே ஆர்டிஓ கட்டணம் என கூறி ரூ.1,500 வரையிலும் கார் களுக்கு ரூ.5000 வரையிலும் விற் பனையாளர்கள் கட்டணம் வசூலிக்கப் படுகிறது

இது குறித்து பேசிய ஆர்டிஓ அதிகாரி ஒருவர், ‘‘இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.200, அதிக சிசி திறன் கொண்ட வாகனம் என்றால் ரூ.300, 

இதே போல் கார் ஒன்றுக்கு ரூ.600, பெரிய சொகுசு வகை காருக்கு ரூ.1000 வரை மட்டுமே பதிவு கட்டண மாக வசூலிக்கப் படுகிறது. 

இதுவும் தற்போது இணைய தளம் மூலமாகவே கட்டணம் செலுத் தப்படுகிறது. 

எங்கள் பெயரைச் சொல்லி விற்பனை யாளர்கள் சிலர் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கிறார்கள்’’ என்கிறார்கள்.

இது குறித்து போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரி களிடம் கேட்ட போது, ‘‘ மத்திய அரசு தற்போதுள்ள இணையதள சர்வரை தரம் உயர்த்தி வருகிறது. 

இதன் மூலம் விண்ணப்பித்த அன்றே பதிவுச்சான்று, நம்பர் பெற வழிவகை செய்யப்படும். 

மேலும் வாகனம் வாங்கும் இடங்களி லேயே பதிவுச்சான்று பெறும். திட்டத்தை மத்திய அரசு சில இடங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது. 

இதன்படி, சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஷோரூமுக்கே சென்று 


வாகனத்தை ஆய்வு செய்து, ஆன்லைன் மூலம் ஆர்டிஓவுக்கு ஆவணம் அனுப்பி வைப்பார். 

தமிழகத்தில் விரைவில் அத்திட்டம் அறிமுகமாக வுள்ளது. இதன் மூலம் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே ஐஆர்டிஏ உத்தரவுப்படி, வாகனங் களுக்கான புதிய காப்பீடு கட்டணம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதன்படி இன்ஜின் திறன்களுக்கு ஏற்ப கார்களுக்கு 3 ஆண்டுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.5,286 முதல் ரூ.24,305 ஆகவும் 

இரு சக்கர வாகனங் களுக்கு இன்ஜின் திறனுக்கு ஏற்ப ரூ.1,045 முதல் அதிக பட்சமாக ரூ.13,034 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)