பிரான்சை கலக்கும் காக்கா பொறுப்பில்லாத குடிமக்கள் !





பிரான்சை கலக்கும் காக்கா பொறுப்பில்லாத குடிமக்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஒரு ஊர்ல ஒரு காக்காவாம்... இல்ல.. இல்ல.. 6 காக்காவாம்... அத பத்தின செய்தி தான். பொதுவாகவே காகங்கள் ரொம்ப புத்திசாலி களாம். 
பிரான்சை கலக்கும் காக்கா பொறுப்பில்லாத குடிமக்கள் !
எந்த அளவுக்கு என்றால் மனிதர்களுக்கு அடுத்து புத்தி கூர்மை காகங் களுக்குத் தானாம். எதை சொல்லி கொடுத்தாலும் உடனே கப் என்று பிடிச்சுக்கு மாம். சீக்கிரத்தில மனுஷங்களோடு ஒட்டிக்குமாம். 

காகங்களின் இந்த இயல்பை தற்போது சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டுக் காரர்கள். எப்படி தெரியுமா?

குப்பை போட வேண்டாம் 

இங்கு ஒரு பார்க் அதாவது பூங்கா இருக்கு. அதன் பெயர் புய் டு பவ் என்பது. இந்த பார்க் பிரான்சின் மேற்கு பகுதியில் ரொம்ப பிரபலம். 

அதனால நிறைய பேரு இந்த பார்க்குக்கு வந்துட்டு போவாங்க. வந்தவங்க சும்மா இல்லாமல் அந்த பார்க்கில கண்ட இடத்துல குப்பையை போட்டுட்டு போனார்கள். 

இதனால பூங்கா நிர்வாகம், அங்கு தினமும் வருபவர் களிடம், குப்பையை போடாதீங்க -ன்னு சொல்லி சொல்லி பார்த்தது. யாருமே கேட்கல. 

6 காக்காக்கள் 
குப்பையை போட வேண்டாம்.. சுத்தமாக வைத்திருக்க உதவவும்" அப்படின்னு சொல்லி அங்கங்கே பலகையில எழுதி வச்சாங்க. ம்ஹூம்... ஒருத்தரும் அதை கண்டுக்கவே இல்லை. 

அதனால் வெறுத்து போன பூங்கா நிர்வாகம், இப்படி இவர்களிடம் கதறி கதறி கேட்டுட்டு இருக்கிறவதை விட வேற ஏதாவது வழி பண்ணலாம்னு யோசித்தார்கள். 

அப்போ ஞாபகத்துக்கு வந்தது தான் காக்கா. 6 காகங்களை செலக்ட் பண்ணாங்க. கீழே கிடக்கும் குப்பையை எடுத்து அங்குள்ள பெட்டி ஒன்றில் போட பயிற்சி அளித்தார்கள். 

சிகரெட் துண்டுகள் 

நம்ம ஊர் மாதிரி, அந்த நாட்டிலேயும் சிகரெட் ரொம்ப பிடிப்பாங்க போல இருக்கு. அதனால முதல் பயிற்சியே மக்கள் கீழே பிடிச்சு போடும் சிகரெட் துண்டுகளுக்குத்தான். 
எங்கெல்லாம் சிகரெட் துண்டு மற்றும் சின்ன சின்ன குப்பைகள் இருக்கிறதோ அதை யெல்லாம் இந்த 6 காகங்களும் எடுத்துட்டு போய் ஒரு பெட்டியில போட்டுட்டு வருது. 

இப்படி பார்க்-ல வேலை செய்ற காகங்களுக்கு ஏதாவது கூலியோ பரிசோ தருவது தானே நியாயம்? அதை தான் அந்த பூங்கா நிர்வாகமும் செய்யுது.

ரொட்டி துண்டுகள் 

எப்படின்னா... ஒரு சிகரெட் துண்டையோ, அல்லது குப்பையையோ எடுத்துட்டு போய் அங்குள்ள பெட்டியில் போட்டால், அந்த நல்ல செயலுக்கு அந்த பெட்டிக்குள் இருந்து ஒரு ரொட்டி துண்டு வந்து வெளியே விழுகிறது. 

அந்த பரிசை எடுத்துக் கொண்டு இந்த 6 காகங்களும் சண்டை போடாமல் ஷேர் செய்து சாப்பிடு கின்றன. அப்போ கூட இதுங்களோட ஒற்றுமை குறையல பாருங்களேன்! 

இயற்கை கற்று தருகிறது 

இது பற்றி அங்குள்ள பூங்கா தலைவர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் சொல்லும் போது, இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் தூய்மையாக இருப்பதில் கவனமாகத் தான் இருக்கிறார்கள். 
பிரான்சை கலக்கும் காக்கா பொறுப்பில்லாத குடிமக்கள் !
ஆனாலும் சுற்று சூழலை காக்க வேண்டும் என்பதை இயற்கை கூட நமக்கு கற்று கொடுக்கிறது 

என்பதை தெரிவிப்பதற் காகத் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். என்றார். வெக்கப் படணும் மக்களே வெக்கப்படணும்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)