வயலில் நடனமாடி கிகி சவாலை நிறைவேற்றி அசத்திய சகோதரர்கள் !

0
கிரி சவாலை, தெலுங்கானாவை சேர்ந்த சகோதரர்கள் வயலில் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவி வருகின்றன.
கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரில் இருந்து நடுரோட்டில் இறங்கி இளைஞர்கள், இளைஞிகள் நடனமாடு வதற்கு எதிராக போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதில் சிலர் காயமடைந்தும், இறந்தும் போயுள்ளனர். இருப்பினும், பலர் காரில் இருந்து இறங்கி நடனமாடி சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த சகோதரர்கள், இந்த சவாலை வித்தியாச மான முறையில் செய்துள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவ துவங்கியது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த 

லம்பாடிபல்லி கிராமத்தை கீலா அனில்குமார் (24) மற்றும் அவரது சகோதரர் பிலி திருப்பதி (28) ஆகியோர், இரண்டு மாடுகளை வயலில் உழ துவங்கு கின்றனர். 


மாடுகள் உழ துவங்கும் போதே, இருவரும், 'இன்மை பீலிங்ஸ்' என்ற பாடலுக்கு நடனமாடு கிறார்கள். 

இந்த காட்சியை, ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் பதிவு செய்து தனது சமூக வலை தளத்தில் பதிவேற்றினார். தொடர்ந்து இது வேகமாக பரவ துவங்கியது.

இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்; 

கிகி சேலஞ்ச் தொடர்பாக போலீசார் எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து, இதனை பாதுகாப்பாக செய்வது குறித்து யோசித்தேன். 

அப்போது, வந்த யோசனை படி சகோதரர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் இதனை பயிற்சி செய்து சிறப்பாக செய்தனர் என்றார். 

சகோதரர்கள் நடனமாடியதை பார்த்த இணைய தளவாசிகள், அவர்களை பாராட்டு வதுடன், இணையத்தையே வென்று விட்டதாக கூறி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)