எந்த வங்கி எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளது - மினிமம் பேலன்ஸ் !

0
வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை என்று 
ஒரு வருடத்தில் வங்கி நிறுவனங்கள் 5,000 கோடி ரூபாயினை அபராதமாக வசூலித்துள்ள தாகச் செய்திகள் வெளியானது. 

அதில் எஸ்பிஐ வங்கி 2,433.87 கோடி ரூபாயும், எச்டிஎப்சி வங்கி 590.84 கோடி ரூபாயும், 

ஆக்சிஸ் வங்கி 530.12 கோடி ரூபாயும் வசூலித்த நிலையில் தற்போது முழுப் பட்டியல் வெளியாகி யுள்ளது.

எனவே குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று 2017-2018 நிதி ஆண்டில் 

எந்த வங்கி எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளது என்ற முழுப் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி

சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை என்று எஸ்பிஐ வங்கி 

அதிக பட்சமாக 2,433.87 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்துள்ளது.

எச்டிஎப்சி வங்கி


எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து எச்டிஎப்சி வங்கி 590.84 கோடி ரூபாயினைக் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத வங்கி கணக்குகள் மூலமாக வசூலித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி குறைந்த பட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் நிர்வகிக்க வில்லை என்று 530.12 கோடி ரூபாயினை அபராதமாக வசூலித்துள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை 
நிர்வகிக்க வில்லை என்று வாடிக்கை யாளர்களிடம் இருந்து 210.76 கோடி ரூபாயினை வசூலித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 317.6 கோடி ரூபாயினை வங்கி வாடிக்கை யாளர்கள் சேமிப்புக் கண்க்குகளில் 

குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று வசூலித்துள்ளது.

அலகாபாது வங்கி

அலகாபாத் வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து 16.16 கோடி ரூபாயினை அபராதமாக வசூலித்துள்ளது.

ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி 48.42 கோடி ரூபாயினைச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்று வாடிக்கை யாளர்களிடம் இருந்து 10.94 கோடி ரூபாயினை வசூலித்துள்ளது.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று 17.35 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து அபராதமாகப் பெற்றுள்ளது.

பாங்க் ஆப் மகாட்ராஷ்டிரா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா 19.17 கோடி ரூபாயினைக் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

கனாரா வங்கி


கனாரா வங்கி 118.11 கோடி ரூபாயினைக் குறைந்த பட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலித்துள்ளது.

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 173.92 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று வசூலித்துள்ளது.

கார்ப்ரேஷன் வங்கி

கார்ப்ரேஷன் வங்கி 24.29 கோடி ரூபாயினைக் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

தேனா வங்கி

18.25 கோடி ரூபாயினைக் குறைந்த பட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலித்துள்ளது.

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி 41.95 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச 
இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று அபராதமாக வசூலித்துள்ளது.

ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ்

ஓரியண்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸ் 131.48 கோடி ரூபாயினைக் குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

பஞ்சாப் & சிண்ட் வங்கி

பஞ்சாப் & சிண்ட் வங்கி 0.97 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று வசூலித்துள்ளது.

சிண்டிகேட் வங்கி

சிண்டிகேட் வங்கி 57.54 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று வசூலித்துள்ளது.

யூகோ வங்கி

யூகோ வங்கி 5.47 கோடி ரூபாயினை வாடிக்கை யாளர்களிடம் இருந்து குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வில்லை என்று வசூலித்துள்ளது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 46.11 கோடி ரூபாயினைச் சேமிப்புக் கணக்கு களில் 

குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா

யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா 5.83 கோடி ரூபாயினைச் சேமிப்புக் கணக்கு களில் 
குறைந்த பட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

விஜயா வங்கி

விஜயா வங்கி 1.07 கோடி ரூபாயினைச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)