15 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் செவ்வாய் கோள் !

0
விண்வெளியில், 15 ஆண்டுகளு க்கு பின் ஏற்படும் அரிய நிகழ்வாக, இன்று, பூமிக்கு மிக அருகில், செவ்வாய் கோள் நெருங்கி வருகிறது. 
இதை பார்க்க பிர்லா கோளரங்கத்தில், இரவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப் புறமாக, ஆறு கோள்கள் உள்ளன. அவற்றில், முதலில் இருப்பது செவ்வாய். செவ்வாயை கடந்து, 

26 மாதங்களு க்கு ஒரு முறை, பூமி நீள் வட்ட பாதையில் செல்லும். அதாவது, செவ்வாய்க்கு நேர் எதிராக, 

வட்ட பாதையில், பூமியும் கடந்து செல்லும். ஆனால், பூமியை விட அதிக துாரமான, 

நீண்ட வட்ட பாதையில், செவ்வாய் சுழல்வதால், பூமிக்கும், செவ்வாய் க்கும் இடையிலான துாரம் மாறும்.

இதன்படி, இந்த மாதம், 27ம் தேதி முதல், செவ்வாய்க்கு நேரே பூமி வரும், நேரமைவு துவங்கி யுள்ளது. 

அதில், இன்று, பூமிக்கும், செவ்வாய் க்கும் இடையிலான துாரம், மிக குறைகிறது. 


அதாவது, 5.76 கோடி கி.மீ., தொலைவில், செவ்வாய் வரும் என, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் அறிவிப்பின்படி, செவ்வாய் கோள், பூமிக்கு, 5.73 கோடி கி.மீ., நெருக்கமாக வரும். 

இயல்பாக, செவ்வாய் கோள், 38 கோடி கி.மீ., துாரத்தில் சுழலும். இதற்கு முன், 2003ல், 5.57 கோடி கி.மீ., துாரத்தில், பூமிக்கு அருகில் செவ்வாய் சுழன்றது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கு அருகில், பூமி வரும் நிகழ்வை பார்க்க, சென்னை யில் உள்ள பிர்லா கோளரங்கத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 

இரவு, 7:00 மணி முதல், 9:00 மணி வரை, இந்த நிகழ்வை, தொலைநோக்கி வழியாக பொது மக்கள் பார்க்கலாம் என, 

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின், செயல் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)