சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி மம்மி... 113 வழக்குகள் !





சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி மம்மி... 113 வழக்குகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
1
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிழைப்புக் காகக் கடந்த 45 ஆண்டு களுக்கு முன் டெல்லி வந்துள்ளார். அன்று தொடங்கியது இவர்களுக்குக் குற்றப்பாதை.
சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி மம்மி... 113 வழக்குகள் !
குடும்ப பொருளாதாரத்தை சமாளிக்கச் சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கினர். அதன் பிறகு, மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக உருவெடுத் துள்ளார் பசிரான் (வயது 62).

இவருக்கு எட்டு மகன்கள் உள்ளனர். கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்ட விரோத நடவடிக்கை ஆகியவற்றில் தன் மகன்களோடு இணைந்து செயல்பட்ட இவரைக் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்கள்.

இந்த நிலையில், டெல்லி சங்கம் விஹார் பகுதியில் பசிரானை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், பெண் குற்றவாளி களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தான் பசிரான். 

இவர், மீது 113 குற்றவழக்குகள் பதிவாகி யுள்ளது. தேடப்படும் குற்றவாளி யாக இருந்த பசிரான், போலீஸார் பிடியிலிருந்து தப்பிக்க சில நாள்களாகத் தலைமறை வாக இருந்தார். 

இந்நிலையில், சங்கம் விஹார் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தி னரைச் சந்திக்க நேற்று வந்தார். இந்த தகவல் முன்கூடியே கிடைத்ததால் அவரை சுற்றி வளைத்து கைது செய்தோம். 

தனது மகன்களுடன் இணைந்து செய்த குற்றச் செயல்கள் எண்ணில் அடங்காதவை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பசிரானும், அவரது கூட்டாளி களும் சேர்ந்து ஒருவரை, 
காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். மேலும், அந்த சடலத்தை எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கடந்த ஜனவரி மாதம் போலீஸார் கைது செய்தனர். 

ஆனால், பசிரான் மட்டும் தப்பித்து விட்டார். இதனிடையில், நடைபெற்ற விசாரணை யில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலையை அவர்கள் செய்தது தெரிய வந்தது. 

பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார்.' என்றார்.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment