பட்டீஸ்வரத்தில் கிணற்றில் குவியல் குவியலாக பாம்புகள் !

0
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ் வரத்தில் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் நாகசுந்தரம் என்பவரது தென்னந் தோப்பு உள்ளது.
பட்டீஸ்வரத்தில் கிணற்றில் குவியல் குவியலாக பாம்புகள் !
இந்த பகுதியில் உள்ள மூங்கில் மரங்களுக்கு இடையே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 20 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று பராமரிபற்ற நிலையில் உள்ளது. 

இந்தநிலை யில் அங்கு வேலை செய்யும் விவசாய தொழிலா ளர்கள் மூங்கில் மரங்களை வெட்ட சென்றனர். 

அப்போது மூங்கில் இடுக்குகளி லிருந்து பாம்புகள் வருவதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ளவர் களுக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்டில் விட்டனர்

இதைத் தொடர்ந்து அங்கு வந்த மக்கள் அருகில் உள்ள கிணற்று க்குள் பார்த்தனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரை யும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. 

பழங்கால கிணற்று க்குள் சிறிதும் பெரிதுமாக குவியல், குவியலாக பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே இது குறித்து தீயணைப்பு துறையினரு க்கும் வனத்துறை யினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. 
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமை யிலான தீயணைப்பு வீரர்களும், 

வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமை யிலான வனத்துறை அதிகாரி களும் கிணற்று க்குள் குவியல் குவியலாக இருந்த பாம்புகளை நீண்ட கம்பிகள் மூலம் லாவகமாக பிடித்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் விட்டனர். 

இதில் சில பாம்புகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)