மருத்துவமனையில் ஜெ. அதிக அளவு இனிப்பு சாப்பிட்டாரா?





மருத்துவமனையில் ஜெ. அதிக அளவு இனிப்பு சாப்பிட்டாரா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த போது, அவருக்கு கட்டுப் பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப் பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மருத்துவமனையில் ஜெ. அதிக அளவு இனிப்பு சாப்பிட்டாரா?
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்ட போதே, அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருந்துள்ளது. 

அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக, ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் பலரும் சாட்சியம் அளித்துள்ளதாக கூறப் படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த காலத்தில் அதிக அளவில் இனிப்பு வகைகளை உட்கொண்ட தாகவும், 

இந்த தகவல் ஆறுமுக சாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் இடம் பெற்றுள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
மருத்துவமனையில் ஜெ. அதிக அளவு இனிப்பு சாப்பிட்டாரா?
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதா வுக்கு, நவம்பர் 22-ஆம் தேதி மட்டும் லட்டு, குலோப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளை ஜெயலலிதா அதிக அளவில் உட்கொண்ட தாகவும், 

டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கை அவர் பருகிய தாகவும் அப்பல்லோ மருத்துவமனை 

நிர்வாகம் தாக்கல் செய்த உணவுப் பட்டியல் ஆவணங் களில் கூறப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதை யடுத்து, மருத்துவ மனை நிர்வாகம் ஜெயலலிதா வுக்கு இனிப்பு வகைகளை கொடுத்ததா, அல்லது மருத்துவர் களின் அறிவுரையை மீறி ஜெயலலிதா இனிப்பு வகைகளை கேட்டு சாப்பிட்டாரா? 

யார் அவருக்கு இனிப்பு வகைகளை வரவழைத்து கொடுத்தது? என்பது குறித்து ஆறுமுக சாமி ஆணையம் விசாரணையை தீவிரப் படுத்தி யுள்ளதாக கூறப் படுகிறது.
மருத்துவமனையில் ஜெ. அதிக அளவு இனிப்பு சாப்பிட்டாரா?
ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். 

இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள்,  குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணைய த்தில் ஆஜர் ஆனார்கள்.

இவர்கள் ஒவ்வொரு வரிடமும் சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)