திரையரங்கில் இருப்பது போல மூச்சுத் திணறுகிறது - ஜெயலலிதா ஆடியோ | Breathtaking like in the theater - Jayalalitha audio !





திரையரங்கில் இருப்பது போல மூச்சுத் திணறுகிறது - ஜெயலலிதா ஆடியோ | Breathtaking like in the theater - Jayalalitha audio !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ இன்று பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டுள்ளது.
திரையரங்கில் இருப்பது போல மூச்சுத் திணறுகிறது


அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது 2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா பேசிய ஆடியோவை, மருத்துவர் சிவக்குமார், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த ஆடியோ இன்று வெளியிடப் பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், மூச்சுத் திணறலு க்குப் பிறகு, இருமலுடன் மருத்துவர் அர்ச்சனா வுடன் ஜெயலலிதா பேசிய 52 விநாடிகள் கொண்ட ஆடியோ வெளியிடப் பட்டுள்ளது.

ஆடியோவை பதிவு செய்யும் போது, 

ஜெயலலிதா :  எதில் பதிவு செய்கிறீர்கள்?

சிவக்குமார்: விஎல்சி அப்ளிகேஷனில்.


ஜெயலலிதா : பதிவு செய்வது சரியாகக் கேட்கிறதா?

சிவக்குமார்: சிறப்பாக இல்லை.

ஜெயலலிதா : அதற்காகத் தான் அப்பவே கூப்பிட்டேன். எடுக்க முடியாது என்று சொன்னீர்கள்.

சிவக்குமார்: அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்.


ஜெயலலிதா : எடுக்க முடிய வில்லை என்றால் விட்டு விடுங்கள் என்கிறார். மேலும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனாவுடன் ஜெயலலிதா பேசுவதும் அதில் பதிவாகி யுள்ளது. தனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என மருத்துவரிடம் ஜெயலலிதா கேட்கிறார்.

மருத்துவர் அர்ச்சனா 140 /80 என பதிலளிக்கிறார். இது எனக்கு நார்மல் தான் என்கிறார் ஜெயலலிதா. மூச்சுத் திணறல் எப்படி இருந்தது என்று மருத்துவரிடம் விளக்கிய ஜெயலலிதா,  திரையரங்கில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசில் அடிப்பது போல எனக்கு மூச்சுத் திணறுகிறது என்றார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆன நிலையில், தற்போது அவர் அப்பல்லோ மருத்துவ மனையில் பேசிய ஆடியோ வெளியாகி யுள்ளது. முன்னதாக, அப்பல்லோ மருத்துவ மனையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே பழச்சாறு அருந்தும் விடியோவும் வெளியாகி யிருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)