ஸ்டெர்லைட் விஷயத்தில் பாரதிராஜா காட்டம் !

0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஸ்டெர்லைட் விஷயத்தில் பாரதிராஜா காட்டம் !
ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு படுதலால் பல நோய்களும் தாக்கு கின்றன என மக்கள் தொடர் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகினறனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு களைக் குறித்து விளக்கும் பாடல் ஒன்றை இயக்குநர் அமீர் நடிப்பில் தயாராகி யிருந்தது. 

`ஸ்டெர்லைட் ஆலையை மூடு' எனப் பெயரிடப் பட்டுள்ள இப்பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் வேல் முருகன், அமீர், பாரதிராஜா, டிராஃபிக் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். 

இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்துவது மக்கள் தானே. 

அரசியல் போராட்டமா நடந்தது. ஸ்டெர்லைட் போராட்ட த்தைப் பல மாதங்களாக பல்வேறு இயக்கங்கள் இணைந்து முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். 
இயக்கங்கள் பெயர் எடுப்பதற்காக இந்த விஷயங்கள் நடத்தப் படுவதில்லை. அந்த பகுதி மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளை விக்கும் என மக்கள் போராடு கிறார்கள். 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட போராட்டங்கள் நடந்தன. ஆனால் இவ்வளவு அடக்கு முறைகள் இல்லை. இது மட்டு மில்லை பல்வேறு விதமான பிரச்னைகள் இருக்கு. 

இவ்வளவு இயக்கங்கள் அங்குப் போராடி வரும் போது தடை விதித்திருக் கிறார்கள். இந்த விஷயத்தில் பங்கு பெற்றவகள் சமுதாய நோக்கோடு சமுதாய நலன் கருதி நாங்கள் இங்குக் கூடியிருக் கிறோம்.

எமர்ஜென்சி காலத்தில் கூட நாம் சுதந்திர மாக இருந்தோம் .அதில் சிறு நியாயம் இருந்தது. இயக்கங்க ளைத் தடை செய்வது குண்டர் சட்டம் பாய்வது என தற்போது, அதைக் காட்டிலும் கொடூரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கு, இது ஒரு ஜனநாயக மானதாக இல்லை என எங்கள் கோரிக்கை களை தலைமை செயலாளர், முதல்வர், அமைச்சர் என அனைவரை யும் பார்த்துக் கூறவுள்ளோம். 
எங்கக் கோரிக்கை களுக்குச் சரியான வகையில் பதில்கள் இல்லை யென்றால் வித்தியாச மான முறையில் அனைத்துத் தமிழ் சமுகமும் இணைந்து போராடும் போது தமிழக அரசால் தாங்க முடியாது" எனக் காட்டமாக பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)