ரிகஷா தொழிலாளி மகளுக்கு வங்கிப்பணி !

0
கொஞ்சம் சிரமப்பட்டு தேடினால் தான், சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
வாசலில் அறிவிப்பு பலகையும் இல்லை. ஆனால், அந்த மையம் பலரின் வாழ்வில் புதிய வழியையும், கௌரவமிக்க முகவரியையும் தந்துள்ளது. 

நாம் சென்ற போது, மீப்பெரு வகுத்தியைக் கண்டு பிடிப்பது எப்படி, அதை வினாத்தாளில் எவ்வாறு குழப்பி கேட்பார்கள் என்பதை விளக்கிக் கொண்டி ருந்தார் பயிற்சியாளர். 

டி.என்.பி.சி., ஐ.பி.பி.எஸ்., எஸ்.எஸ்.சி., எஸ்.ஐ உள்ளிட்ட தேர்வுகளுக்கு இங்கே கட்டணமின்றி பயிற்சி அளிக்கப் படுகிறது. 

சென்னை மையத்தின் ஒருங்கிணைப் பாளர் வாசுதேவன், எல்.ஐ.சி தொழிற் சங்கம் சார்பாக 2009-ம் ஆண்டு கோவையில் தொடங்கப் பட்டது அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். 

அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக, தமிழகம் முழுவதும் 32 இடங்களில் மையங்களைத் திறந்தோம். 

போட்டித் தேர்வுகளுக் கான அறிவிப்பு வெளியானது, எங்கள் மையம் பற்றிய செய்தியை நண்பர்கள், சமூக ஊடகங்கள், செய்தித்தாள் வழியாகப் பகிர்ந்து கொள்வோம். அதைப் படித்து மாணவர்கள் வருவார்கள். 

எந்தவிதக் கட்டணமும் கிடையாது. 20 அல்லது 21 வகுப்புகளில் பேஸிக் சிலபஸை நடத்துவோம். பயிற்சி யாளர்களும் கட்டணம் பெற்றுக் கொள்ளாத தன்னார் வலர்கள் தான். 
பெரிய கட்டணம் கட்டிப் படிக்கச் செல்லும் இடங்களை விடவும் நல்ல பயிற்சியை நாங்கள் தருகிறோம் என்பதற்கு என் மகளே ஓர் உதாரணம். என் மகளை இங்கே தான் பயிற்சிக்கு அழைத்தேன். 

அவர் வர வில்லை. வேறொரு மையத்தில் கட்டணம் செலுத்தி படிக்கச் சென்றார். ஒவ்வொரு முறை அங்கே சென்று வந்ததும் அங்குள்ள நடை முறைகள் பற்றிச் சொல்வார். 

அதை ஒப்பிடுகை யில், எங்கள் மையம் நிச்சயம் சிறப்பான பயிற்சி அளிக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டேன். 

இங்கே, தேர்வுக்காக மட்டுமே மாணவர் களைத் தயார் செய்யவில்லை. சமூக அக்கறைமிக்க அலுவர் களாக மாற்ற வேண்டும் என்பதற் காகவும் தான்" என்கிறார்.

எல்.ஐ.சியில் பணிபுரியும் ஜெயா ஜான், `முதலில் சிலபஸ் அடிப்படையில் பயிற்சி அளிப்பவர் களை முடிவு செய்வோம். முடிந்த வரை, தேர்வு நாள் வரை அவர்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பது போல பார்த்துக் கொள்வோம். 

இங்கே வரும் பெரும் பான்மையோர் முதல் தலை முறையாகக் கல்விப் பெற்றவர்கள். சென்னையைச் சுற்றி யுள்ள ஊர்களிலிருந்து வருகிறார்கள். அதனால், கூடுதல் கவனம் கொள்கிறோம். 
ரிகஷா தொழிலாளி மகளுக்கு வங்கிப்பணி !
அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட அனைத்தும் கற்றுத் தருகிறோம்" என்கிறார்.

இந்த மையத்தில் பயிற்சி பெற்று டி.என்.பி.சி எழுதி, கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் சண்முகராஜன், கவர்மென்ட் போஸ்ட்டிங் எல்லாம் பணம் கொடுத்து கிடைப்பது தான் என்று நினைச் சுட்டிருந்தேங்க. 

வாசுதேவன் சாரிடம் பேசினதுக்கு அப்புறம் தான் 'சரி நாமளும் டி.என்.பி.சி எழுதிப் பார்க்கலாம்னு தோணுச்சு. போஸ்ட்டிங்கும் கிடைச்சது" என்கிறார்.

எல்.ஐ.சி தொழிற் சங்கத்தைச் சேர்ந்த கங்காதரன், இந்த மையத்தின் தன்னார்வலர். ஒரு முறை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வந்துட்டி ருந்தேன். செக்கர் டிக்கட் கேட்டதும் கொடுத்தேன். 

அவரை எங்கியோ பார்த்த மாதிரியே இருந்துச்சு. அவரும் சிரிச்சுக்கிட்டே, 'என்ன சார் மறந்துட் டீங்களா? நம்ம மையத்தில் படிக்க வந்திருந்தேனே'னு சொன்னதும் நினைவுக்கு வந்துச்சு. 
அன்னிக்கு முழுக்க மனசு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு" என்கிறார், அந்த நிமிடங்களை மனதில் கொண்டு வந்தவாறே. அப்பா சப்போர்ட் இல்லாத குடும்பம் எங்களோடது. முதல் தலை முறை பட்டதாரி. 

என் ஃப்ரெண்ட்ஸ் மூலம் இங்கே வந்தேன். அது வரை கவர்மென்ட் எக்ஸாமில் என்னென்ன கேட்பாங்கனு கூட எனக்குத் தெரியாது. அது பெரிய விஷயமே இல்லே. இவ்வளவு தான் சிலபஸ்' னு சொல்லி பயத்தைப் போக்கினாங்க. 

இந்த வாரம் என்ன படிக்கப் போறோம்னும் தெளிவாக ஷெட்யூல் பண்ணிடுவாங்க. அதைச் சரியாக ஃபாலோ பண்ணினாலே போதும். 

எனக்கு கூட்டுறவு வங்கியிலும், பிறகு, ஐ.பி.பி.எஸ் எக்ஸாம் எழுதியதால் இந்தியன் பேங்கிலும், எல்.ஐ.சியிலும் வேலை கிடைச்சது. இதில், எல்.ஐ.சி-யைச் செலக்ட் பண்ணினேன். 

வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகப் போகுது என்கிற யுவஶ்ரீ முகத்தில் அத்தனை மலர்ச்சி. 

அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்புப் பயிற்சி மையம், தமிழகம் முழுவதி லிருந்து பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங் களைச் சேர்ந்த 900 நபர்களுக்கு அரசுப் பணியை எட்டும் வாய்பை வழங்கி யுள்ளது. 
அவர்களில் ஒருவர் தான், நளினி. தற்போது, சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி புரிபவர். ``என் அப்பா, ரிக்‌ஷா ஓட்டுறார். 

ரொம்ப கஷ்டப்பட்டுப் படிக்க வெச்சாலும், படிக்கும் காலத்தில் பார்ட் டைம் வேலைக்கு அனுப்பலை. அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.டெக் முடிச்சேன். ஃபீஸ் கட்டி பயிற்சிக்குச் போற சூழல் இல்லை. 

அப்போ தான் இந்த மையம் பற்றி தெரிஞ்சுக் கிட்டு வந்தேன். வேலைக் கான வழி மட்டுமின்றி, எதையும் எதிர் கொள்ளும் நம்பிக்கையையும் கொடுத்துச்சு என்கிறார் புன்னகையுடன்.
ரிகஷா தொழிலாளி மகளுக்கு வங்கிப்பணி !
அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மனிதர் களுக்கும் சென்று சேர வேண்டும் என்றால், எவ்வித கைம்மாறும் எதிர் பார்க்காத அதிகாரிகளாக இருக்க வேண்டும். 

அதற்கான பெரு முயற்சி தான் இது" என்கிறார் வாசுதேவன். கடைசி மனிதருக்கும் அதிகாரம் சென்று சேரட்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)