ஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | The audio and handwriting list of Jaaliyalitha spoke ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

ஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | The audio and handwriting list of Jaaliyalitha spoke !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமை யிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று ஜெயலலிதா வின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணைய த்தில் ஆஜர் ஆனார். ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல்
அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணைய த்தில் ஆஜராகு மாறு கூறி அனுப்பி விட்டனர். ஜெயலலிதா வின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத் தில் ஆஜரானார். இவரை தொடர்ந்து ஜெயலலிதா வின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணைய த்தில் ஆஜர் ஆனார்கள்.


இவர்கள் ஒவ்வொரு வரிடமும் சசிகலா வின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்நிலை யில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி மருத்துவர் சிவக்குமார்  தாக்கல் செய்த ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 

மேலும் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்பு களையும் அவர் தாக்கல் செய்தார். அதில் அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு காலை 5.45க்கு கீர்ன் டீ, 
ஜெயலலிதா பேசிய ஆடியோ
காலையில் 4 இட்லி மற்றும் பிரட், மதிய உணவு 2 மணிக்கு வழங்க வேண்டும். மதிய உணவாக பாசுமதி அரிசி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திய தாக தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் -2 ம் தேதி அவர் 106.9 கிலோ எடை இருந்த தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விசாரணை ஆணைய த்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause