கோவையில் 840 கிலோ குட்கா பறிமுதல் !





கோவையில் 840 கிலோ குட்கா பறிமுதல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கோவையில் உள்ள ராஜா தெருவில் வெள்ளிக் கிழமை காலை நடைபெற்ற சோதனையில் 5.45 மணயளவில் பெங்களூருவில் இருந்து 
கோவையில் 840 கிலோ குட்கா பறிமுதல் !
2 மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட் களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 840 கிலோ எடை கொண்ட இந்த குட்கா பொருட்களின் மதிப்பு ரூ. 6.44 லட்சம் ஆகும். 

இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப் பாட்டுத் துறையின் கோவைப் பிரிவு அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறுகை யில், 

எனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படை யில் நடத்தப் பட்ட இந்த சோதனை யில் 2 மனி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 6.44 லட்சம் மதிப்புடைய 840 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. 

ஒரு மனி லாரியில் 20 பண்டல்களும் மற்றொன்றில் 8 பண்டல் களும் இருந்தன. இந்த இரு மினி லாரிகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். 
அவர்களிடம் விசாரித்த போது, இந்த பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே தங்களிடம் தெரிவித்த தாகவும், இங்கு இதை பெற்றுக் கொள்பவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வில்லை எனவும் கூறி யுள்ளனர்.

இதுவரை இந்த 2 வாகனங் களையும் யாரும் உரிமை கோரி வரவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

முன்னதாக, 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் இருந்து கோவை வந்த ஆம்னி பேருந்தில் இருந்து 

ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப் பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)