அடங்க மறுக்கும் தூத்துக்குடி போராட்டம்... 10 பேர் கைது !

0
நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அடங்க மறுக்கும் தூத்துக்குடி போராட்டம்... 10 பேர் கைது !
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 100 நாள்களாக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தங்களின் 100-வது நாள் போராட்ட த்தின் அடையாளமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடைபெறும் என முன்னதாக அறிவித் திருந்தனர். 

இதன் முன்னெச் சரிக்கை நடவடிக்கை யாக, நேற்று முன் தினம் தூத்துக் குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. 

ஆனால் அதை மீறி, தங்களின் போராட்ட த்தை நடத்த மக்கள் முடிவு செய்தனர். இதனால், பாதுகாப்புப் பணிகளுக் காக 2000 போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். 

போராட்டக் காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும் போது, அவர்களை காவல் துறை தடுத்ததால் போராட்டம் கலவரமாக மாறத் தொடங்கியது. 
வாகனங்க ளுக்குத் தீ வைக்கப் பட்டது, கல்வீச்சு, கண்ணீர்ப் புகை குண்டுகள் ஆகிய சம்பவங் களும் நடை பெற்றன. 

இதில், 67 இருசக்கர வாகனங்கள், 42 கார்கள், ஒரு போலீஸ் வாகனம் மற்றும் 2 ஆம்புலன்ஸ் என மொத்தம் 110 வாகனங்கள் எறிக்கப் பட்டன. 

அதன் பின், கலவரத்தில் ஈடுபட்டவர் களை போலீஸார் துப்பாக்கி யால் சுடத் தொடங்கினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 

போராட்டக் காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு, அனைத்துத் தலைவர்களும் தங்களின் கண்டனங் களைத் தெரிவித் துள்ளனர். 

இதை யடுத்து நேற்று இரவு, போராட்டத்தைத் தூண்டிய தாகக் கூறி, தூத்துக் குடியில் 10-க்கும் மேற்பட்டவர் களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலை யில், போராட்டக் காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து, 
இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கப் பேரவை சார்பில் முழு கடை யடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி க்கு வரும் பேருந்துகள், மாவட்டத்தின் எல்லை யிலேயே நிறுத்தப் பட்டுள்ளன. 

தூத்துக் குடியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் இன்று நடை பெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. 

மறு தேர்வுகள் பின்னர் அறிவிக்கப் படும் என பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித் துள்ளது. 
தொடர்ந்து, போராட்ட த்தில் உயிரிழந் தவர்கள் மற்றும் படுகாய மடைந்தவர் களைப் பார்வை யிடவும் ஆறுதல் கூறவும், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், 

ம.தி.மு.க தலைவர் வைகோ, பி.ஆர். பாண்டியன் ஆகியோர் இன்று தூத்துக்குடி க்கு வர உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)