இந்த நோய் உள்ளவர்களுக்கு குவைத்தில் வீசா கிடையாது !





இந்த நோய் உள்ளவர்களுக்கு குவைத்தில் வீசா கிடையாது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
குவைத்தில் 22 வகையான நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இனி வேலை வாய்ப்பு விசா கிடையாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நோய் உள்ளவர்களுக்கு குவைத்தில் வீசா கிடையாது !
குவைத் அரசின் புதிய சட்டப்படி 22 வகையான நோய் களால் தாக்கப் பட்டுள்ளவர் களுக்கு இனி ரெசிடென்ஷியல் விசா (Permanent Residence Status) வழங்கப் படாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

வெளி நாட்டினர்களின் மருத்து வத்திற்காக அரசு செலவிடும் செல வீனத்தை குறைப்பதற் காகவே இந்த முடிவு குவைத் சுகாதார அமைச்சகத்தால் எடுக்கப் பட்டுள்ளதாக 

Al Watan அரபி பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி stepfeed.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

கேன்சர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தொற்றும் தன்மை யில்லாத பல வகை நோய்கள் இவற்றுடன் சிறுநீரக செயலிழப்பு, பார்வை குறைபாடுகள் மற்றும் பல என பட்டியல் நீள்கிறது. 
குவைத்திற்கு வேலையின் நிமித்தம் வருபவர்கள் 100 சதவிகிதம் வேலை பார்க்கும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags: