குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை... உதவி கேட்டுகும் டிரைவர் !





குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை... உதவி கேட்டுகும் டிரைவர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இதய நோயுடன் போராடி வரும் 14 மாத பெண் குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறு கார் டிரைவர் ஒருவர் மன்றாடுகிறார். 14 மாத குழந்தை யான ஷ்ரத்தா உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார்.
குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை... உதவி கேட்டுகும் டிரைவர் !
அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தா பிறந்த 2 மாதங்களில் அவரது இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

ஷ்ரத்தா வுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். இதை யடுத்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் ஷ்ரத்தாவை அனுமதித்தனர்.

ஷ்ரத்தாவின் தந்தை சுப்ரந்த் ரவுத் கார்பரேட் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக உள்ளார். அவரின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரம். அதில் வீட்டு வாடகை, உணவு, மகளின் சிகிச்சை செலவு என அனைத்தை யும் கவனிக்க வேண்டி உள்ளது.

சுப்ரந்தின் மனைவி வீட்டை கவனித்துக் கொண்டி ருக்கிறார். டாக்டர் ஃபீஸ், மருந்து, மருத்துவ மனை கட்டணம், அறுவை சிகிச்சை என்று ஷ்ரத்தாவின் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் தேவை ப்படுகிறது. 

ஷ்ரத்தா வின் சிகிச்சைக் காக தங்களிடம் இருந்த அனைத்து பொருட் களையும் அடமானம் வைத்து டெல்லி அப்பல்லோ மருத்து வனையில் சேர்த்தனர்.

ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாத தால் ஷ்ரத்தாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். தாங்கள் ஏற்கனவே சேர்த்து வைத்த பணத்தை வைத்து ஷ்ரத்தாவு க்கு அறுவை சிகிச்சை

செய்து விடலாமா என்ற எண்ணத்தில் குழந்தையை பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை. வலியால் துடிக்கும் ஷ்ரத்தா வுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 
குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை... உதவி கேட்டுகும் டிரைவர் !
என் குழந்தை என் கண் முன்பு துடிக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு சென்று கொண்டி ருக்கிறாள். ஒரு தந்தை யாக என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. 

நான் என்ன தான் உழைத் தாலும் குறுகிய காலத்தில் ரூ. 5 லட்சம் சம்பாதிக்க முடியாது என்கிறார் சுப்ரந்த்.

நீங்கள் சுப்ரந்துக்கு உதவி செய்ய நினைத்தால் நன்கொடை அளிப்பதுடன் இந்த செய்தியை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.
Tags: