முதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை !

0
மன உறுதியை வளர்த்துக் கொள்வது தான் இலக்கை அடைந்து, வெற்றியைப் பெறுவதற்கான சிறந்த வழி
முதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை !
ஜப்பானைச் சேர்ந்த புத்த தத்துவ வியலாளரும் கல்வி யாளருமான டாய்சாகு இகேடா (Daisaku Ikeda) தெளிவாகச் சொல்கிறார். 

மன உறுதி இருந்தால் தான் சாதனை சாத்தியம். வரலாறு நமக்கு உணர்த்து வது இந்த உண்மையைத் தான். 

ஒன்றை அடைந்தே தீருவது என்று மனதில் ஓர் உறுதி பிறந்து விட்டால் அதை நிச்சயம் அடைந்து விடலாம். 

என்ன ஒன்று... எந்தத் தடை வந்தாலும், அதை எதிர்த்து நிற்கிற உறுதியை மட்டும் விட்டு விடவே கூடாது; எதற்காக வும் தளர்ந்து போகக் கூடாது. 

எட்மண்ட் ஹிலாரி

இதற்கு உதாரண மாக பல சாதனை யாளர்கள் இருக்கி றார்கள். அவர்களில் ஒருவர் எட்மண்ட் ஹிலாரி (Edmund Hillary)... 

டென்சிங்கோடு இணைந்து முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தவர். எட்மண்ட் ஹில்லாரியின் கதை மன உறுதிக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
நியூசிலாந்தி லுள்ள ஆக்லாண்டில் (Aukland) பிறந்தவர் ஹிலாரி. `மலையேற்றம்’ பலருக்குப் பொழுது போக்கு; ஹிலாரிக்கோ அது தான் வாழ்க்கை. 

எத்தனை மலைகளின் உச்சியைத் தொட முடியுமோ அத்தனை யையும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்கிற தீராத வெறி. 

ஐரோப்பா வின் ஆல்ப்ஸ் மலைத் தொடர் தொடங்கி எத்தனையோ மலைகளின் உயரத் தொட்டிருந் தாலும், 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கால்பதிப்பது தான் அவருடைய லட்சியம். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சி களை, இடப்பாடு களை, 

எதிர் கொண்ட இன்னல் களையெல் லாம் தன்னுடைய `ஹை அட்வெஞ்சர்’ (High Adventure) என்ற நூலில் விரிவாகச் சொல்லி யிருக்கிறார் எட்மண்ட் ஹிலாரி. 

அதில் அவருக்கு மன உறுதி கிடைத்ததற் கான ஒரு சம்பவமும் குறிப்பிடப் பட்டிருக் கிறது.

எவரெஸ்ட்
எவரெஸ்ட்டு க்குச் செல்வதற் கான வழி அப்போது திபெத், நேபாளம் இரண்டின் கட்டுப் பாட்டில் இருந்தன. வருடத்துக்கு ஒரு முறை தான் மலை யேறும் குழுவுக்கு அனுமதி கிடைத்தது. 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு மலையேற்றக் குழுவுடன் சேர்ந்து 1952-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏற முயற்சி செய்தார் ஹிலாரி. 

அந்தக் குழுவில் டென்சிங்கும் இருந்தார். அந்த முயற்சி தோற்றுப் போனது. தட்ப வெப்ப நிலை மிக மோசமாக இருந்தது. ஹிலாரி, எவரெஸ்ட்டில் ஏற முடிய வில்லையே என்கிற ஏக்கத்துடன் திரும்பினார். 

முற்றிலும் குலைந்து போயிருந்தார். கிட்டத்தட்ட எவரெஸ்ட்டின் முக்கால் வாசி தூரம் போய் விட்டு, உச்சியைத் தொடாமல் திரும்பி யிருந்தது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்திருந்தது.

சில வாரங்கள் கழித்து ஹிலாரிக்கு இங்கிலாந்தி லிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாரோ ஓர் அமைப்பினர் `எங்கள் உறுப்பினர் களிடம் வந்து நீங்கள் பேச வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தி ருந்தார்கள். 

முதலில் அவருக்கு இங்கிலாந்து க்குப் போகவே மனமில்லை. ஆனால், எங்கேயாவது போய் வந்தால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும், மன அமைதி கிடைக்கும் என்றும் தோன்றியது. கிளம்பி விட்டார்.
குறிப்பிட்ட அந்த நாளில் விழா மேடையில் ஏறினார் ஹிலாரி. அவ்வளவு தான்... இடி முழக்கம் போல் எழுந்தது கரவொலி. 

அது வரை தன்னை ஒரு தோல்வி யாளர் என நினைத் திருந்த ஹிலாரிக்கு அது ஆச்சர்ய த்தைத் தந்தது. அரங்கிலிருந் தவர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. 

அந்தப் பாராட்டு மழை அவர் இதயத்தையே நனைத்து விட்டது. அவரால் முதலில் பேசக் கூட முடிய வில்லை. 

பார்வை யாளர்கள் அவருடைய சாகசத்தை, அதன் அருமையைத் தெரிந்து கொண்டதற் கான அங்கீகாரத்தை அவர் உணர்ந்து கொண்டார். 

`நீங்கள் தோல்வி யாளர் இல்லை மிஸ்டர் ஹிலாரி!’ என்று அந்தக் கைதட்டல் சொல்வது போல அவருக்கு இருந்தது. 

அந்த நிமிடத்தில் அவர் மனதில் ஓர் உறுதி பிறந்தது. ஹிலாரி மைக்கின் முன்னா லிருந்து மெள்ள நகர்ந்து வந்தார். மேடையில் நடந்தார். 
மேடையின் பின்புறத்தில் ஒரு மலையின் படம் வரையப் பட்டிருந்தது. ஹிலாரி, அதன் உயரத்தைத் தொட்டுக் காட்டி, தன் முஷ்டியை உயர்த்தி உரத்த குரலில் இப்படிச் சொன்னார்... 

எவரெஸ்ட் சிகரமே... முதல் முறை உன்னைத் தொட்டு விட வந்த போது நீ என்னைத் தோற்கடித்து விட்டாய். 

அடுத்த முறை நான் உன்னைத் தோற்கடித்து விடுவேன். ஏனென்றால், எப்படி நீ வளர்ந்திருக் கிறாயோ அதே போல நானும் வளர்ந்து கொண்டிருக்கிறேன்...

எட்மெண்ட் ஹிலாரி- டென்சிங்
அவர் மன உறுதி அதைச் சாதித்தும் காட்டியது. 1953-ம் வருடம், மே 29-ம் தேதி அவரும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். 

`எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இருவர்’ என்ற பெருமை யையும் பெற்றார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)