நம்முடைய காப்பீடு மூலம் கடன் வாங்கலாமா?

0
ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டை பயன்படுத்த முடியும் என நினைக் கிறீர்களா? எப்போதும் அப்படி நினைக்கத் தேவையில்லை.
நம்முடைய காப்பீடு மூலம் கடன் வாங்கலாமா?
நிதி சிக்கல் ஏற்படும் சமயத்தில் காப்பீட்டை அடமான மாக வைத்து பணத்தை பெற முடியும். ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 

சில வங்கிகள், ஆதித்யா பிர்லா பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட சில வங்கி அல்லாத நிதி நிறுவ னங்கள் காப்பீட்டை அடமான மாக வைத்து கடன் வழங்கு கின்றன.

தகுதி என்ன?

சரண்டர் மதிப்பு இருக்கும் பாலிசிகளை மட்டுமே அடமான மாக வைக்க முடியும். அதாவது எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசிகளை மட்டுமே அடமானம் வைக்க முடியும். 

ஆனால் டேர்ம் பாலிசி உள்ளிட்ட சில பாலிசிகளை அடமானமாக வைக்க முடியாது. உங்களது பாலிசிகளில் உள்ள சரண்டர் மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாக பெற்றுக் கொள்ள முடியும். 

பாலிசி காலம் அதிகரி க்கும் பட்சத்தில் சரண்டர் மதிப்பும் அதிக ரிக்கும். அதனால் பாலிசியின் இறுதி காலத்தில் அடமானம் வைக்கும் போது அதிக தொகை கிடைக்கும்.
வட்டி

தனிநபர் கடனுக் கான வட்டியை விட பாலிசியை அடமானம் வைத்து வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் குறைவு. உதாரணத்து க்கு ஆக்ஸிஸ் வங்கியில் தனிநபர் கடனுக்கு 15.5 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப் படுகிறது. 

ஆனால் பாலிசி அடமான கடனுக்கு 10.5 சதவீதம் முதல் 12.5 சதவீத வட்டிதான் வசூலிக்கப் படுகிறது. இதே போல ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.99 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது. 

ஆனால் பாலிசி அடமான கடனுக்கு 8.15 சதவீதம் முதல் 11.75 சதவீத வட்டி வசூலிக்கப் படுகிறது. இந்த கடனில் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டுமே முக்கிய மான ஆவணம் ஆகும். 

இதனை அடிப்படையாக வைத்தே வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த கடனிலும் பரிசீலனை கட்டணம் இருக்கிறது. ஆனால் மற்ற தனிநபர் கடன்களை விட இந்த கடனில் பரிசீலனை கட்டணம் குறைவு. 
உதாரண த்துக்கு ஹெச்டிஎப்சி வங்கியில் வாங்கும் கடனில் ஒரு சதவீதம் அல்லது குறைந்த பட்சமாக 5,000 ரூபாய் பரிசீலனை கட்டண மாக வசூலிக்கப் படுகிறது. 

ஆனால் தனிநபர் கடனுக்கு 2.5 சதவீதம் வரை இந்த வங்கி வசூலிக் கிறது. குறைந்த பட்சம் ரூ.1999 முதல் அதிகபட்சம் ரூ. 25,000 வரை தனிநபர் கடனுக்கு இந்த வங்கி வசூலிக் கிறது.

ஆக்ஸிஸ் வங்கியில் கடன் வாங்கும் தொகையில் 0.15 சதவீதம் அல்லது ரூ.1,000. இதில் எந்த தொகை அதிகமோ அந்த தொகையை பரிசீலனை கட்டண மாக வசூலிக் கிறது. 

ஆனால் தனிநபர் கடனுக்கு 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை பரிசீலனை கட்டணமாக இந்த வங்கி வசூலிக் கிறது.

சாதகம்

வங்கிகளை பொறுத்த வரை இது பாதுகாப் பான கடன் என்பதால் பரிசீலனை கட்டணம், வட்டி விகிதம் உள்ளிட்டவை குறைவு. 

தவிர பாலிசி எடுக்கும் போது உங்களை பற்றிய முழுமை யான தகவல்களை (கேஒய்சி) அளித்திருப்ப தால், இந்த கடனில் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறைவு. 
இது அடமான கடன் என்பதால் கடன் வாங்கு பவரின் சிபில் மதிப்பெண் குறித்த கவலை தேவை யில்லை. குறைவான சிபில் மதிப்பெண் இருந்தாலும் கடன் கிடைக்கும்.

தங்கத்தை அடமானம் வைப்பது அல்லது பங்குகளை அடமான மாக வைப்பதை விட இன்ஷூரன்ஸ் பாலிசியை அடமானமாக வைக்கலாம். தங்கம் மற்றும் பங்குகளின் சந்தை விலைகள் மாறக்கூடும். 

ஆனால் பாலிசியின் சரண்டர் மதிப்பு என்பது மாறாதது. மேலும் உங்களது கடன் அளவை உயர்த்து வதற்கு காப்பீடு பயன்படும். உதாரணத் துக்கு வீட்டுக்கடன் வாங்கும் போது, பாலிசியை அடமான மாக வைக்கும் பட்சத்தில் 

குறைந்த வட்டியில் கூடுதல் தொகை கடனாக கிடைக்கும் என லோன் டேப் நிறுவன த்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அமித் திவாரி குறிப்பிட் டுள்ளார்.
பாதகம்

பாலிசியை அடமான மாக வைத்து கடன் வாங்கும் பட்சத்தில் கடன் வழங்கும் நிறுவனத் துக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் கிளைம் தொகை நேரடியாக நாமினிக்கு செல்லாது. 

கடன் கொடுத்த நிறுவனம், கடனுக்கான தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையைத் தான் நாமினிக்கு வழங்கும். அதனால் குறுகிய கால தேவை களுக்கு மட்டும் காப்பீட்டை அடமான மாக வைத்து கடன் வாங்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)