நம்ம ஊர் ஐமேக்ஸ் நிஜமானதா?

0
ஜி.எஸ்.டி.க்கு அப்புறமா சாதா தியேட்டர் லையே டிக்கெட் விலை இப்படி ஏறிருச்சே... அப்போ முன்னாடியே அவ்வளவு விலை விற்ற ஐமேக்ஸ் இப்போ என்னவா கிருக்கும்” னு பலரும் யோசிச்சிருப் பீங்க. 
நம்ம ஊர் ஐமேக்ஸ் நிஜமானதா?
அது இப்போ 360 ரூபாய்ல இருந்து 460 ரூபாய் ஆகிருச்சு பாஸ். அதுவும் 3டிக்கு கூடுதலா 30 ரூபாய்,

ஆன்லைன் புக்கிங்கிற்கு 30 ரூபாய்னு ஒரு 3டி -ஐமேக்ஸ் படம் பார்க்க 520 ரூபாய் வரைக்கும் எப்படியும் ஆகிரும்.
கொள்ளையர்களுடன் போராடிய வயதான தம்பதி !

அவ்வளவு ரூபாய் கொடுத்து படம் பார்க்குறதுல என்ன ஸ்பெஷல்?

இந்த விலைக்கு முக்கிய காரணம் அவர்கள் வழங்கும் தரம் மற்றும் அவர்களுக்கு என அவர்கள் உருவாக்கி யுள்ள நற்பெயர்.

மிகப்பெரிய திரை, துல்லியமான ஒலி என சினிமா பார்க்கும் உணர்வை மற்றோர் உயரத்துக்கு எடுத்து சென்றது ஐமேக்ஸின் சிறப்பு.

திரைய ரங்கில் எங்கு உட்கார்ந் தாலும் ஒலி ஒரே மாதிரி துல்லியமாக இருப்பதற்கு ஐமேக்ஸின் லேசர் தொழில் நுட்பம் உத்தர வாதம் தருகிறது
மரபணு வரைபடங்கள் அறிந்து கொள்ள?
ஒலிக்கே இப்படி என்றால் திரைஒளிக்கு ஐமேக்ஸில் பிரத்யேக கேமராக்கள் வைத்திருக் கிறார்கள். இவற்றை வாடகைக்கு மட்டுமே கொடுக் கிறார்கள்.
அதன் வாடகையும் டிக்கெட்டை போன்றே அதிகம் தான். எனவே ஹாலிவுட் மக்கள் படத்தின் முக்கிய காட்சி களை மட்டுமே இந்த கேமராவில் எடுப்ப துண்டு.

விலையில் மட்டும் இல்லை அளவிலும் ஐமேக்ஸ் கேமராக்கள் மிகவும் பெரிதாகவும், கனமாகவும் இருப்பதால் இதை இயக்குவதும் கடினம். ஆனால் அளவின் பயன் படம் பார்க்கும்போது புரியும். 

இந்தப் பிரத்யேக கேமராக் களில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் ஐமேக்ஸ் திரையரங் குகளில் ஒடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண மாக எடுக்கப் பட்ட படங்கள் கூட ரி-மாஸ்டரிங் முறையின் மூலம் ஐமேக்ஸ் ஃபார்மட்க்கு மாற்ற முடியும். பாகுபலி 2 அப்படி தான் ஐமேக்ஸில் ரிலீஸ் ஆனது.

என்ன இரு ந்தாலும் தரத்தில் ஐமேக்ஸ் கேமராக் களில் எடுக்கப் பட்ட படங்களின் அருகில் கூட வர முடியாது.
மாம்பழத்தால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது !
எனவே டிக்கெட் விலையை கருத்தில் கொண்டு ஐமேக்ஸ் கேமராக் களில் எடுக்கப் பட்ட படங்களை மட்டும் ஐமேக்ஸ் திரையரங் குகளில் பார்ப்பதே கெட்டிக் காரத்தனம்.

Is our IMAX mood really real?
அப்படி கொடுத்த காசுக்கு நியாயம் வேண்டு மானால் பிரபல ஹாலிவுட் இயக்கு னரான கிறிஸ்டோபர் நோலனின் படங்களை கண்டிப்பாக ஐமேக்ஸில் பார்க்கலாம்.

ஏனென்றால் ஐமேக்ஸின் மீது தீராத காதல் நோலனிற்கு எப்போதும் உண்டு. தி டார்க் நைட் படத்தின் சில காட்சிகளை
குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற ஆதரவு இயக்கம்
ஐமேக்ஸில் எடுத்ததில் அரம்பித்து இன்று கிட்டத் தட்ட முழு 'டன்கிர்க்' திரைப் படத்தையும் ஐமேக்ஸில் எடுக்கும் அளவிற்கு ஈர்க்கப் பட்டுள்ளார் நோலன்.

இதுவரை வெளியாகி யுள்ள எந்த படத்தையும் விட 'டன்கிர்க்' திரைப்படம் அதிகமான காட்சி நேரத்தை கொண்டி ருக்கலாம்.

அதாவது மொத்த 107 நிமிடங் களில் கிட்டதட்ட 100 நிமிடங்கள் ஐமேக்ஸ் கேமராக் களில் எடுக்கப் பட்டது.

ஐமேக்ஸ் திரை யரங்கில் பார்க்க இதைவிட சிறந்த படம் இருக்க முடியாது என்றே கூறலாம்.

ஐமேக்ஸி லேயே பல ஃபார்மட்கள் உள்ளன. முதல் ஃபார்மட் ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm. இது தான் ‘டன்கிர்க்' திரைப்படம் எடுக்கப் பட்ட ஒரிஜினல் ஃபார்மட்.

இது கிட்டத் தட்ட 18k ரெசல்யூஷன். சாதாரண மான டிஜிட்டல் தியேட்டர் களில் அதிக பட்சம் 4k தான் என்பது குறிப்பிடத் தக்கது.
நெல்லிக்காய் பருப்பு ரசம் செய்வது !
அடுத்தது ஐமேக்ஸ் 35mm ஃபிலிம், இது ஃபிலிம் அகலத்தில் 70mm ஃபார்மட்டை விட சிறியது. இது கிட்டத் தட்ட 12-13K ரெசல்யூஷன் உடையது.

இவை இரண்டும் ஐமேக்ஸ் ஃபிலிம் ஃபார்மட்கள். எனவே ஒரு பிரிண்ட்டின் தயாரிப்பு விலையே அதிகமாக இருக்கும்.

ஃபிலிம்மில் எதோ மாஜிக் இருப்பதாக கிறிஸ்டோபர் நோலன் நம்புகிறார். ஆனால் ஐமேக்ஸில் டிஜிட்டல் ஃபார்மட்களும் உண்டு.
அதில் முதல் ஒன்று ஐமேக்ஸ் லேசர். இது 4k ரெசல்யூஷன் உடையது. அடுத்தது ஐமேக்ஸ் ஸேனான், இது 2k ரெசல்யூஷன் உடையது.

இரண்டுமே டூயல் ப்ரொஜெக்ஷன் உடையவை. ஐமேக்ஸ் டிஜிட்டலால் ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm பக்கத்தில் கூட நிற்க முடியாது.

சென்னை மக்களே, உடனே ஐமேக்ஸ் ஃபிலிம் 70mm 18k ரேசல்யூஷனா என்று அசந்து போக வேண்டாம்.

நம்மூரில் இருப்பது கடைசி யாக குறிப்பிடப் பட்ட ஐமேக்ஸ் ஸேனான் ஃபார்மட் தியேட்டர் தான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)