ஜெயலலிதா நினைவு நாளா - பிறந்தநாளா? | Jayalalithaa on Memorial - birthday?

0
ஜெயலலிதா பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடிய ஜெயங்கொண்டம் அ.தி.மு.க- வினர். இந்தச் செயலால் அரியலூர் அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது.

ஜெயலலிதா நினைவு நாளா - பிறந்தநாளா?


ஜெயலலிதா வின் 70 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் வெகு விமரிசை யாகக் கொண்டாடி னார்கள் அ.தி.மு.க- வினர். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு போட்டதால். போட்டிப் போட்டுக் கொண்டு அவரவர் ஃப்ளெக்ஸ் போர்டு களை வைத்து அசத்தி னார்கள்.

ஆனால், ஜெயலலிதா வின் பிறந்தநாள் விழாவுக்கென்று ஃப்ளெக்ஸ் பேனரை வைக்காமல்,  முதலாம் ஆண்டு நினைவு தின ஃப்ளெக்ஸ் பேனரை வைத்து மாலை அணிவித்து பத்திரிகை களுக்குப் பேட்டியும் கொடுத்தனர். பின்பு எல்லோரு க்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டிருந்த போது. தட்டு வண்டி ரிக்‌ஷா ஓட்டும் பெரியவர், 

`அண்ணே அம்மாவோட பிறந்தநாள் விழாவுக்குப் போய் நினைவு நாள் பேனர் வைத்துக் கொண்டாடு கிறீர்களே. அம்மா பிறந்த நாளா இல்லை இறந்த நாளா' என்று கேட்க... பதறிப்போன அ.தி.மு.க- வினர் செய்தி எடுத்துச் சென்ற பத்திரிகை யாளர்களிடம் போனை போட்டு அந்தச் செய்தியைப் போட வேண்டாம் என்று எல்லோரிட மும் மன்றாடியிருக் கிறார்கள்.

ஆளாளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களது போட்டோவை போட்டு ஃப்ளெக்ஸ் வைப்பதிலேயே குறியாக இருந்தார் களே தவிர, அம்மாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் அடிக்கிறோம் என்று தெரிய வில்லையா, ஜெயலலிதா வின் பிறந்த நாளுக்கும் இறந்த நாளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார் களே அ.தி.மு.க- வினர் என்று தலையில் அடித்துக் கொள்கிறார் கள் ஜெயங்கொண்டம் மக்கள். இவர்களின் செயலைப் பார்த்து ஊர், உலகமே சிரித்துக் கொண்டிருக் கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)