பள்ளிப்படிப்பை விட்டவர்களுக்கு இலவச அனிமேஷன் வகுப்பு !

0
மதுரை கே.கே. நகர் பகுதியில் ‘அனிமேஷன் ஐஸ்வர்யா வீடு எங்கு இருக்கிறது?’ எனக் கேட்டால் எளிதாக அடையாளம் காட்டி விடுவார்கள். 
பள்ளிப்படிப்பை விட்டவர்களுக்கு இலவச அனிமேஷன் வகுப்பு !
கடந்த இரண்டு ஆண்டு களாக ஏழைக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய வர்களுக்கு இலவசமாக அனிமேஷன் வகுப்புகள் நடத்தி வழிகாட்டி வருகிறார் ஐஸ்வர்யா. 
2 அவித்த முட்டையின் விலை ரூ.1,700 இதிலென்ன தப்பு !
'படிப்பில் ஆவரேஜாக இருக்கிற வங்களும் சாதிக்க நிறையத் துறைகள் இருக்கு. 

அப்படி எனக்குத் தெரிந்த துறையான அனிமேஷனில் மத்தவங் களுக்கும் வழிகாட்ட என்னால் என்ன முடியுமோ அதைச் செய்றேன்'' என்று பளீர் புன்னகையுடன் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா. 

அனிமேஷன் நான் படிச்சது, வளர்ந்தது எல்லாம் மதுரை தான். சின்ன வயசுல இருந்தே நாம மத்தவங் களுக்கு பிரயோஜனமான வாழ்க்கை வாழணும்னு நினைப்பேன். 

ஸ்கூல்ல படிச்சப்போ ஒவ்வொரு கல்வியாண்டு முடியும் போதும் என்னோட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், ஆடைகளை யெல்லாம் ஏழைக் குழந்தை களுக்கு கொடுக்குற பழக்கம் இருந்தது. 
பி.எஸ்சி., அனிமேஷன் முடிச்சதும், கொஞ்ச நாள் ஒரு ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டில் வேலை பார்த்தேன்'' என்றவர், தன் சிந்தனையை மாற்றிய தருணங் களைப் பற்றி பகிரத் தொடங்கினார்.

''அந்தச் சமயங் களில் சின்னப் பசங்க, பொண்ணுங்க படிப்பை பாதியில விட்டதால ரொம்பக் குறைவான சம்பளத்துல வேலை பார்த்துட்டு 

இருக்கிறதை பார்க்கும் போதெல்லாம், அவங்க கிட்ட 'ஏன் தொடர்ந்து படிக்கலை? 'ன்னு கேட்பேன். 
தண்ணீர் பால் தான் நல்லது? உண்மையா?
'படிப்பு வரல', 'வறுமை' னு பல காரணங் களைச் சொன்ன அவங்கள்ல பலருக்கும் இருந்த கற்பனைத் திறனையும், 

சரியான வழி காட்டுதல் இருந்தா அவங்க சிறப்பா செயல்படுவாங்க என்பதையும் உணர்ந்தேன்.

இவங் களுக்கு என்ன செய்ய லாம்னு அக்கறையோட யோசிச்சப்போ, 'உதவுற துக்கு பணம், பொருள் அவசிய மில்லை. 

உதவணும் என்ற எண்ணமே போதும்' என்ற வாசகம் தான் ஞாபகம் வந்தது. 

பள்ளிப் படிப்பை பாதியில விட்ட பசங்க கிட்ட பேசி, அவங்களோட விருப்ப த்தைப் பொறுத்து, 
டிடிபி, அனிமேஷன், மல்டி மீடியா வகுப்பு களை ரெண்டு மாச காலத்துக்கு அவங்க ளுக்கு எடுத்தேன். 
ஆர்வமா கத்துக் கிட்ட அவங்க ளுக்கு வேலை வாய்ப்பு களையும் உருவாக்கித் தந்தேன். 

இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்ய ‘ஞான போதினி’ என்ற அமைப்பை ஆரம்பித்தேன்.

‘ஞான போதினி’யில் எங்கிட்ட அனிமேஷன் கத்துக்கிட்ட பலர் இன்னைக்கு வெற்றி யாளர்களா வந்திருக் காங்க, கை நிறையச் சம்பாதிக் கிறாங்க. 

கத்துக்கி றதுக்கு வயசு ஒரு தடை இல்ல. அதனால எந்த வயசானா லும் ஆர்வமா வர்ற எல்லாரு க்கும் அனிமேஷன் கத்துத் தர்றேன். 

ஏழை மாணவர் களுக்குக் கட்டணம் கட்டி என்னால பள்ளி, கல்லூரி களில் சேர்த்து விட முடியாது. 

ஆனா நானே ஒரு வகுப்பறையா மாறி எனக்குத் தெரிஞ்சதை அவங்க ளுக்குக் கத்துத் தர முடியும். 
மருந்து கடையில் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி !
அதைத்  தான் செய்றேன்'' என்றவர், குழந்தை களுக்கு தான் வழங்கும் பயிற்சிகள் பற்றிப் பேசினார்.

''இப்ப இருக்கிற குழந்தைங்க நிறைய அனிமேஷன் படங்கள், டி.வி.சீரியல்கள் பார்க்கிறாங்க. 

அதெல்லாம் எப்படி உருவாக்கப் படுதுன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் அவங்க கிட்ட அதிகமா இருக்கும். 
அவங்களோட கிரியேட்டி விட்டியைத் தூண்டி விடுறதுக்கும், இந்தத் துறை பற்றிய எதிர்கால வாய்ப்பு களை அவங்களுக்கு எடுத்துச் சொல்றது க்கும் அவங்களுக்கு சம்மர் வகுப்புகள் எடுக்கிறேன். 

வசதி இருக்கிறவங்ககிட்ட மினிமம் ஃபீஸ் வாங்கறேன். இல்லாத வீட்டுப் பிள்ளைங் களுக்கு இலவசமா சொல்லித் தர்றேன்.. 
சுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் புகைப்படங்கள் !
என்னோட கணவரும் ஃபைன் ஆர்ட்ஸ் துறையைச் சேர்ந்தவர் என்பதால, என் முயற்சி களையும் மனசையும் அவரலா புரிஞ்சுக்க முடியும். சேவையில் சேர்ந்து பயணிக் கிறோம்!"
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)