8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸ்திரேலிய ஸ்பின்னர் !

0
ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 
8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸ்திரேலிய ஸ்பின்னர் !
நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் மைதான த்தில் நடந்த போட்டி யில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. 

அதிக பட்சமாகக் கேப்டன் ஜேசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பாம்பர், பென்னிங்டன் மற்றும் ஜேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டு களை வீழ்த்தினர். 

128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று அரை யிறுதிக்கு எளிதாகத் தகுதி பெற்று விடும் என்றே ரசிகர்கள் கருதினர். 

அதுவும், விக்கெட் இழப்பின்றி அந்த அணி 47 ரன்கள் குவித்த போது அந்த நம்பிக்கை அதிகரித்தது. இந்தச் சூழலில் 8 வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் லாய்ட் போப் வீச வந்தார். 
அந்த ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட் வேட்டையைத் தொடங்கிய போப், இங்கிலாந்து அணியை 96 ரன்களு க்குச் சுருட்டியதில் முக்கிய பங்கு வகித்தார். 

9.4 ஓவர்கள் வீசிய போப் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டு களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு இது தான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)