ஸ்பேஸ் த்ரில்லர் என் மகன் ஆரவ்... ஜெயம் ரவி !





ஸ்பேஸ் த்ரில்லர் என் மகன் ஆரவ்... ஜெயம் ரவி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்ன வுடன் யாருக்கும் நம்பிக்கை யில்லை. என் மகன் ஆரவ் இப்படத்தில் அறிமுக மாகியிருக் கிறார் என்று ஜெயம் ரவி பேசினார்.
ஸ்பேஸ் த்ரில்லர் என் மகன் ஆரவ்... ஜெயம் ரவி !

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகி யிருக்கும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை யில் நடை பெற்றது.


'டிக்:டிக்:டிக்' படத்தின் இயக்குநர் சக்தி சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், இசைய மைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஜெயம் ரவி பேசுகையில், ''முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கை யில்லை. 

அதிலும் 'மிருதன்' இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்ப வில்லை. 

இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கப் போகிறேன் என்று சொல்லி யிருந்தால் யாரும் நம்பி யிருக்க மாட்டார்கள்.

பிறகு நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கை யினால் தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். 


இந்தப் படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. 

அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. 

ஏனெனில் ஸ்பேஸ் த்ரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்க ளுக்கு நடிப்பதில் தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். 

ஆனால் இந்தப் படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத் திற்கான உள்ளரங்க அமைப்பு டீட்டெயி லாக இடம் பெற்றிருந்தது. 

இதற்காக கலை இயக்குநரை மனதாகப் பாராட்ட லாம். இப்படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகி யிருக்கிறார். 


அவரிடம் ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என இயக்குநர் கேட்டதைச் சொன்னேன். 'ம் நடிக்கலாம்' என்றார். 

அதற்கு டான்ஸ் தெரிய வேண்டும் என்றேன். 'கத்துக்கலாம்' என்றார். அவருடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவி னரை கவர்ந்தது. 

அதனால் என் மகன் ஆரவ்வை அறிமுகப் படுத்தியிருக் கிறேன். அவருக்கு உங்களின் ஆதரவை தேவை'' என்றார் ஜெயம் ரவி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)