தீபாவின் இந்த நிலைக்கு இது தான் காரணம்?

0
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவா ளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவின் இந்த நிலைக்கு இது தான் காரணம்?
ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா வின் தலைமையை ஏற்காத வர்கள் தீபாவின் பின்னால் அணி வகுத்தனர். 

தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப் பட்டன. 

தொண்டர் களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதா வின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்ப தாக தெரிவித்தார். 

இதற்கிடையில் சசிகலா, முதல்வராக தேர்வு செய்யப் பட்டதும் தேர்தலில் போட்டியி டுவதாகவும் அறிவித்தார் தீபா. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். 

தீபாவின் ஒவ்வொரு செயல் பாடுகளும் ஜெயலலிதாவை நினைவுப் படுத்தும் வகையில் இருந்தன.

இந்நிலை  யில், அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதலால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகி இருக்கின்றன. 
சசிகலாவின் தலைமையை விரும் பாதவர்கள் தீபாவை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களில் பெரும் பாலானவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஓ.பன்னீர் செல்வத்தின் அதிரடி முடிவுக்குப் பிறகு தீபாவின் வீட்டுக்கு வரும் ஆதரவா ளர்கள் கூட்டம் குறையத் தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக உளவுப் பிரிவு போலீஸாரும் உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுத் துள்ளனர். 

இது சசிகலா தரப்புக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பெரும் தலை வலியாக ஓ.பன்னீர் செல்வம் இருப்பதால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். 

இது குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், "தீபாவை ஆதரித்த கட்சியின் நிர்வாகிகள் மீது இதுவரை சசிகலா நடவடிக்கை எடுக்க வில்லை. 

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் சசிகலா. சசிகலா வின் தலைமையை பெரும்பாலான கட்சியின் தொண்டர்கள், மக்கள் விரும்ப வில்லை. 

வேறு வழியின்றி ஜெயலலிதா வின் அண்ணன் மகள் என்றும், அவரைப் போல உருவத் தோற்றம் இருப்பதைப் பார்த்தும் தொண்டர்கள் அங்கு சென்றனர். தற்போது கட்சியி னருக்கு வழிகாட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளார். 
இதனால் தீபா வீட்டில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆதரித்து வருகி ன்றனர். 

இதுவே எங்களுடைய பலம். ஜெயலலிதா வால் அடையாளம் காணப் பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். இதனால் அவரை நம்பி அனைவரும் வருகின்றனர். 

தீபாவையும் ஓ.பன்னீர் செல்வ த்துடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் அதற்கு அவர் ஆலோசித்து விட்டு முடிவை தெரிவிப்ப தாக அறிவித் துள்ளார். 

எங்களுடைய ஒரே நோக்கம் சசிகலா தரப்பினரிடம் ஆட்சியும், அதிகாரமும் சென்று விடக் கூடாது. அதே சமயத்தில் தீபா எங்களுக்கு எதிரியல்ல"என்றனர். தீபா ஆதரவா ளர்கள் கூறுகை யில், "ஓ.பன்னீர் செல்வத்தின் 

வீட்டில் கூடியிரு க்கும் கூட்டத்தில் பெரும் பாலானவர்கள் தீபாவின் ஆதர வாளர்கள் தான். ஓ.பன்னீர் செல்வ த்தை சந்திக்க தீபா வருவதாக தகவல் பரப்பப் படுகிறது. இதனால் அங்கு தீபாவின் ஆதர வாளர்கள் செல்கின் றனர். 

உண்மை யிலேயே அவர்கள் தீபாவின் ஆதரவா ளர்கள். ஜெயலலிதா வின் விசுவாசி கள் நிச்சயம் தீபாவுக்கு ஆதரவளிப் பார்கள். தினமும் அவரது வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையவில்லை. 
ஜல்லிக்கட்டு விவகாரத் தின் போது கூட்டம் இல்லை. தற்போது வழக்கம் போல கூட்டம் உள்ளது. இது போன்ற தேவை யில்லாத வதந்திகள் பரப்பப் பட்டாலும் தீபாவின் பின்னா லிருக்கும் கூட்டத்தை யாரும் கலைக்க முடியாது. 

கட்சியில் மட்டுமல்ல மக்களிடை யேயும் தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை எதிரணியில் இருப்பவர் களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை"என்றனர்.

இது குறித்து தீபாவிடம் கருத்துக் கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிக்க வில்லை. வாட்ஸ்அப் மூலம் தகவலை அனுப்பியும் அவர் தரப்பி லிருந்து பதில் இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)