ஜெயலலிதா வீடியோவை தினகரனிடம் அளித்தது விவேக் | J. Vivek gave the video to the Dinakaran ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஜெயலலிதா வீடியோவை தினகரனிடம் அளித்தது விவேக் | J. Vivek gave the video to the Dinakaran !

Subscribe Via Email

ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவை டிடிவி தினகரனிடம் வழங்கியது விவேக் தான் என்று இளவரசி யின் மகள் கிருஷ்ணப் பிரியா கூறி யுள்ளார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ காட்சி களை டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளி யிட்டார். 
ஜெயலலிதா வீடியோவை தினகரனிடம் அளித்தது விவேக்


அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத் தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசி யின் மகள் கிருஷ்ணப் பிரியா வீடியோவை நாங்கள் தான் டிடிவி தினகரனுக்கு வழங்கினோம். ஆனால் அதனை வெற்றிவேல் வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தி யாளர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) வீடியோவை டிடிவி. தினகரனிடம் வழங்கியது யார் என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக கிருஷணப் பிரியா,"வீடியோவை கொடுத்தது நாங்கள் தான் என்று கூறினேனே தவிர, நான் தான் கொடுத்தேன் என்று கூற வில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவை டிடிவி தினகரனிடன் கொடுத்தது விவேக் தான்.

விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஒபிஎஸ் கூறிய நேரத்தில் சசிகலாவை சிறையில் சந்தித்தோம். ஒபிஎஸ் விசாரணை கமிஷன் கேட்டதால், வீடியோ தேவைப் படலாம் என சசிகலா கூறினார். சசிகலா கூறியதால் வீடியோவை காப்பு எடுத்து விவேக் தினகரனிடன் அளித்தார்" என்று விளக்கம் அளித் துள்ளார்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close